மேலும் அறிய

Lucky Baskhar Teaser: மிடில் கிளாஸ் வங்கி ஊழியராக துல்கர் சல்மான்.. கவனமீர்க்கும் லக்கி பாஸ்கர் டீசர்!

Lucky Baskhar teaser: வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனும் பிரபலமான நடிகருமான துல்கர் சல்மானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் நடிப்பில் வெளியான ஓ காதல்  கண்மணி,  சீதா ராமம் உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக ஆக்ஷன் ஜானரில் அவர் நடிப்பில் வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தில் நடிகர் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் அப்படத்தில் தொடர முடியாமல் போனது. 

 

Lucky Baskhar Teaser: மிடில் கிளாஸ் வங்கி ஊழியராக துல்கர் சல்மான்.. கவனமீர்க்கும் லக்கி பாஸ்கர் டீசர்!

 

தனுஷின் 'வாத்தி' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு திரையுலக இயக்குநர் வெங்கி அட்லூரி. தற்போது அவர் நடிகர் துல்கர் சல்மானை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. 

சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

 

வங்கி ஊழியராக துல்கர் சல்மான் இப்படத்தில் நடித்துள்ளார். மிகவும் விறுவிறுப்பாக அவரைச் சுற்றி நகரும் வகையில் இந்த கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் துல்கர் சல்மான். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருக்கும் அவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அது அவருக்கு எப்படி வந்தது? அதற்கு பின்னணியில் இருக்கும் பிளாஷ்பேக் ஸ்டோரி என்ன என்பது தான் லக்கி பாஸ்கர் கதைக்களமாக இருக்கும் என்பது டீசர் மூலம் அறியப்படுகிறது. 

இப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் இப்படம் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Embed widget