மேலும் அறிய
Advertisement
சிங்கம்புணரியில் வாக்கு சேகரிக்க களம் இறங்கிய கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி..
சிங்கம்புணரியில் கணவனுக்காக களம் இறங்கிய கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி.. வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்..
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவு கேட்டு அவரது துணைவியார் சிங்கம்புணரி சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் திருவிழா 2024
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக 40 தொகுதிகளில் வருகின்ற 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என ஒவ்வொரு கட்சியும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கார்த்தி ப சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஶ்ரீநிதி சிங்கம்புணரி பகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
கார்த்தி சிதம்பரம் மனைவி வாக்கு சேகரிப்பு
சென்ற முறை இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம், இரண்டாவது முறையாக சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இருப்பினும் கார்த்தி சிதம்பரம் வாக்கு சேகரிக்க செல்லும் சில இடங்களில் வாக்காளர்கள் கேள்வி கணைகளால் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக, அவரது தந்தை ப.சிதம்பரத்தை தொடர்ந்து, பரதநாட்டிய கலைஞரும், மருத்துவருமான, அவரது மனைவி ஶ்ரீநிதியும் களம் இறங்கியுள்ளார். அவர் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள கடைகள், தெரு வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆகியாேரிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bengaluru Water Crisis: பெங்களூரு மைதானத்தில் பராமரிப்பு பணிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion