மேலும் அறிய

அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; பழனியில் 48 நாள் விரதத்தை முடித்தார் அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு எப்படி அல்வா கொடுக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டேன்.

கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, செவிலியர் பணி நியமனம், அரசு பணியாளர்கள் நிரந்தரம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காகவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; பழனியில் 48 நாள் விரதத்தை முடித்தார் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் தொடர்பாக செருப்பை கழட்டி வைத்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தை துவங்கினார். இந்நிலையில் 48நாட்கள்  விரதம் நிறைவு செய்யும் வகையில் பழனி கோவிலுக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.  பாஜக தலைவர் அண்ணாமலை காவடி சுமந்தபடி திரு ஆவினன்குடி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு தொடர்ந்து, அடிவாரம் பாத விநாயகர் கோவில்  படிவழிப் பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த டிஎஸ்பி நமச்சிவாயம் என்பவர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினார். அப்போது காவடியுடன் மலைக்கோவிலுக்கு மேலே செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிவழிப் பாதை வழியே பக்தர்கள் இறங்கி வரும் வழி என்பதால் குடமுழுக்கு நினைவரங்கம் வழியே மேலே செல்லுமாறு தெரிவித்தார். அப்போது பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும் வழியில் எப்படி செல்வது?  என்று கேள்வி எழுப்பினார். அப்போது டிஎஸ்பி மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து படிவழி பாதையில் அண்ணாமலை உடன் 5 பேர் மட்டும் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  படிப்பாதை வழியே அண்ணாமலை மலைக்கோவிலுக்கு மேலே சென்றார். தொடர்ந்து  அறுபடை வீடுகளுக்கும் சென்று அண்ணாமலை வழிபாடு   செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; பழனியில் 48 நாள் விரதத்தை முடித்தார் அண்ணாமலை

அப்போது அவர் கூறியதாவது : -

தைப்பூசத்திற்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து சொல்வது ஒன்றும் பெரியதல்ல என்றும், வாழ்த்து தெரிவித்தது சந்தோசம்தான் என்றாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையாக விரதமிருந்து  வெகுதூரம் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை வழிபடுகின்றனர்.  அவர்களுக்கு நடைபாதை, கழிவறை உள்ளிட்ட எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும், எனவே பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மேலும் பிரான்சில் இருந்து கொண்டு பாரதபிரதமர் மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வாழ்த்து சொல்வதும் சொல்லாததும் பெரிதல்ல. ஆனால், தமிழக மக்களும் பக்தர்களும் நம்மீது  பிரதமர் வைத்துள்ள மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றும்,  தினமும் தன்னுடைய அறிக்கையை பார்த்தாலே டி.எம்.கே பைல்ஸ் விடுவதில் உள்ள உறுதி தெரியும் என்றும், ஊழல் அமைச்சர் காந்தி மீது சென்ற ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு விடுத்த நிலையில், இந்த ஆண்டு பாலிஸ்டரை கொண்டுவந்து வேட்டி சேலை செய்கிறார்கள்,

அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; பழனியில் 48 நாள் விரதத்தை முடித்தார் அண்ணாமலை

அதை தடுத்த ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளார்கள் என்றும், நான் விடும் அறிக்கைக்கு போட்டி போட்டு பதில் அறிக்கை விடுவது என ஒவ்வொரு அமைச்சர்களும் தான் செய்வது சரி என்ற வகையில் செயல்படுகின்றனர். எனவே இதைப் பற்றி அதிகம் தற்போது தான் பேசுவேண்டாம் என்றும், பாவியக்கா தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி கவலை இல்லை தாங்கள் மக்களை சந்தித்து   அவர்களது பிரச்சனையை தீர்க்கும்வகையில் அரசியல் செய்கிறோம். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்தான் வியூக நிபுணர்களை அழைத்து அரசியல் செய்தால் மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு ஏழை மக்களின் பசி தெரியாது என்றும் தெரிவித்தார்.

அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; பழனியில் 48 நாள் விரதத்தை முடித்தார் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி பூசல் குறித்து தான் எதுவும் பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி அளிக்கவில்லை என்று அன்பில்மகேஷ் கூறியது பச்சைபொய் என்றும், கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம்,  செவிலியர் பணி நியமனம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர்  சிறப்பாக அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றும், மேலும் சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்குச் சென்று அல்வா சாப்பிட்டார் என்றும், இது தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சி என்றும் தெரிவித்தார். மருத்துவ துறையில் பல்வேறு அவலம் நடப்பதாகவும், இதில் இன்று மிக நல்ல மனம் படைத்த நடிகர் கஞ்சா கருப்பு  எல்லாம் கோபப்படும் அளவிற்கு இந்த ஆட்சி மிகவும் மோசமானதாக உள்ளது என்றும் தெரிவித்தார். 18 வயதிற்கு கீழான குழந்தைகள் அரசியல் கட்சியில் சேரக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது,  தவெக வில் குழந்தைகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியது என்றும், தாவீகாவில் குழந்தைகள் பிரிவு ஒன்று இருப்பது பெரியதல்ல, பாவைக்காவில் இருப்பவர்கள் அனைவரும் குழந்தைகள்தான்  என்றும் தெரிவித்தார்‌.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
Iran Uses Cluster Bomb: இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாலியல் தொல்லை கொடுக்குறாங்க! இவங்களானு ஷாக் ஆயிட்டேன்” வேதனைப்பட்ட ஜோனிடா காந்தி Singer Jonita Gandhi
MAY EYE COME IN ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீ லோகேஷ் போட்ட EFFORT | Lokesh Kanagaraj | Actor shri issue
School Girl Plate Washing | பாத்திரம் கழுவும் மாணவிகள்! அரசு பள்ளியில் அவலம்! ஆக்‌ஷனில் அன்பில்மகேஷ்
Kanchipuram Police | ”டேய் கைநீட்டி பேசுறியா” புகாரளித்த அதிமுக நிர்வாகி! விரட்டியடித்த POLICE
Inbanithi Stalin | ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி! அரசியலுக்கு அச்சாரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
IND vs ENG: நாமதான் பேட்டிங்! புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்.. மீண்டும் கருண் நாயர் - கலக்கலா? கலக்கமா?
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீது நடவடிக்கை எடுங்க’ ஆர்.பி. உதயகுமார் அதிரடி புகார்..!
Iran Uses Cluster Bomb: இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
இஸ்ரேல் மீது கொத்து குண்டை வீசிய ஈரான்; அது என்ன செய்யும் தெரியுமா.? விவரம் இதோ
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
Ind Pak: ”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
நீங்களும் முதலாளி ஆகலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு... ரூ.1.65 லட்சம் மானியம்... மிஸ் பண்ணிடாதீங்க !
நீங்களும் முதலாளி ஆகலாம் ! அரசின் அதிரடி அறிவிப்பு... ரூ.1.65 லட்சம் மானியம்... மிஸ் பண்ணிடாதீங்க !
Kuberaa: ரூ.200 கோடி பிசினஸ்.. ரஜினி வாங்காத பெயரை தனுஷ் வாங்விட்டார்.. குபேரா படம் குறித்து பிரபலம் ஓபன் டாக்
ரஜினி வாங்காத பெயரை தனுஷ் வாங்கிட்டார்.. குபேரா படம் குறித்து பிரபலம் ஓபன் டாக்
Sun TV Shares Down: மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
மாறன் சகோதரர்கள் இடையே பங்கு உரிமை பிரச்னை; அதிரடியாக குறைந்த சன் டிவி பங்குகள்
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
அரசுப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வி; சிவகங்கை டூ ஐஐடி- டெய்லர் மகன் சாதித்தது எப்படி?
Embed widget