மேலும் அறிய
அதிமுக ஒருங்கிணைப்பு.. அலாட் கொடுத்த செங்கோட்டையன் - மதுரையில் சாமிதரிசனத்திற்கு பின் பேட்டி !
பாஜக எப்போதுமே எனக்கு அழைத்து ( INSTRUCTION ) கொடுத்தது இல்லை, என மதுரையில் மூத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

செங்கோட்டையன்
Source : whatsapp
அமித்ஷாவை நேரில் பார்த்தேன், அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது என மதுரையில் செங்கோட்டையன் பேட்டி.
ஒருங்கிணைந்த அதிமுக என்பது விரைவில் எதிர்பார்க்கலாம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது...,” ஒருங்கிணைந்த அதிமுக என்பது விரைவில் எதிர்பார்க்கலாம், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும். பாஜக எப்போதுமே எனக்கு அழைத்து அறிவுறுத்தலும்( INSTRUCTION ) கொடுத்தது இல்லை. நான் அமித்ஷாவை நேரில் பார்த்தேன். அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பாஜக தரப்பில் அழைக்கப்பட்டே சென்றேன் என சொன்னேன், ஒரு முறை அழைத்தார்கள் இரண்டாவது முறை நானே சந்தித்தேன் மூன்று முறை இதுவரை சந்தித்துள்ளேன்.
மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?
மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்
நீங்கள் டிடிவி ஆகியோர் இணைந்து விஜயுடன் கூட்டணி வைக்க போகிறார்களா?
கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆசை, அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது.
ஒருங்கிணைப்பு எப்போது நடக்கும்?
பொறுத்திருந்து பாருங்கள் என்றார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















