மேலும் அறிய

Vijayakanth: விஜயகாந்த் மறைவிற்கு மதுரையில் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்!

விஜயகாந்த் மறைவை தொடர்ந்து தேமுதி தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் பகுதியில் மொட்டை அடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

Vijayakanth: விஜயகாந்த் மறைவிற்கு மதுரையில் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்!

இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார், அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் அவரது உடல்நிலை சீராக உள்ளது தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்தார். மேலும், மருத்துவமனை அறிக்கையும் வெளியிடப்பட்டது. 

Vijayakanth: விஜயகாந்த் மறைவிற்கு மதுரையில் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்!

இதனை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சக்கர நார்காலியில் வந்தார். அவரது இந்த நிலையை கண்டு ஏராளமான தொண்டர்கள் பொதுக்குழுவிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். அவர் கைகளை கூட அசைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு இருந்தார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Vijayakanth: விஜயகாந்த் மறைவிற்கு மதுரையில் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்!

இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் மறைவை தொடர்ந்து தேமுதி தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் பகுதியில் மொட்டை அடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget