ABP NADU செய்தி எதிரொலி: சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
’’முல்லை பெரியாறு நீர் எஞ்சது கூட கிடைக்கவில்லை. இதனால் நீரின் தன்மையும், மண்ணின் தன்மையும் மாறி அனைவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுவருகிறது. சிறுநீரகம் பிரச்னை காரணமாக பலரும் இறந்து வருகின்றனர்”.
சிவகங்கை அருகே உள்ளது கீழப்பூங்குடி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பட்டி என்னும் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால் உடலை திறந்த நிலையில் ஏரியூட்டி வருகின்றனர். இந்த சூழலில் எரியூட்டும் போது மழை பெய்வதால் பாதி அளவிலேயே உடல்கள் எரிந்து முழுமையாக அஸ்தி அடையாத நிலை ஏற்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. சமீபத்தில் கொட்டும் மழையில் பிணங்களை எரிக்கும் பொழுது எடுத்த வீடியோவால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து Abp nadu இணையத்தில்- watch video: கொட்டும் மழையில் எரியும் பிணம்... தவிக்கும் கிராம மக்கள்! என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.
மேலும் Abp நாடு யூ - டியூப் சேனலுக்கு நேரடி ரிப்போட் செய்ய வீரப்பட்டி கிராமத்திற்கு சென்றோம். அப்போது கிராம மக்கள் பல பூதாகரமான விசயங்களை நம்மிடம் தெரிவித்தனர். அதில் “ எங்கள் கிராமத்திற்கு முல்லை பெரியாறு நீர் எஞ்சது கூட கிடைக்கவில்லை. இதனால் நீரின் தன்மையும், மண்ணின் தன்மையும் மாறி அனைவருக்கும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுவருகிறது. சிறுநீரகம் பிரச்னை காரணமாக பலரும் இறந்து வருகின்றனர்”. என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதையும் வீடியோ செய்தியாக வெளியிட்டோம். இந்நிலையில் வீரப்பட்டி கிராமத்திற்கு சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் நேரில் சென்று கிராம மக்களிடம் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். சிறுநீரகம் பிரச்னை எதனால் வருகிறது. யார், யார்க்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை திரட்டி வருகின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் சிறுநீரகம் பாதிப்பு போன்று தெரியும் நபர்களுக்கு மருந்துகளும் வழங்கியுள்ளனர்.
இது மருத்துவ குழுவிடம் பேசிய போது ”கிராமத்திற்கு தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம். முழு ஆய்விற்கு பின் பாதிப்பு குறித்து தெரியவரும். அதற்கான பணிகளை போர்காள அடிப்படையில் செய்து வருகிறோம்” என்றனர். கிராம இளைஞர்கள் சிலர் கூறும்போது ’’தற்போது எங்கள் கிராமத்தில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது, அதற்கு நன்றி. தொடர்ந்து எங்கள் கிராமத்தில் சிறுநீரகம் பாதிப்பு குறித்து கண்டறிய வேண்டும். எங்களுக்கு நிரந்தரமாக நல்ல குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )