மேலும் அறிய
Advertisement
Madurai Aavin: ஆவின் பால் விநியோகம் தாமதம் - பால்பண்ணையை முற்றுகையிட்ட டெப்போ முகவர்கள்
ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. மதுரையிலும் ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலியாக, மதுரை ஆவின் பால் டெப்போக்களில் பால் அட்டை வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என சொல்லப்பட்டது வாடிக்கையாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஆவின் நிர்வாகம் ”ஆதார் அட்டை கட்டாயம் இல்லை ஏதேனும் ஒரு அடையாள அட்டை பெற்றுவிட்டு அதற்கு பின்பாக பால் அட்டை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் பால் டெப்போக்களுக்கு ஆவின் பால் விநியோகம் தாமதம் ஏற்பட்டதால், ஆவின் பால்பண்ணையை டெப்போ முகவர்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுதியது.
மதுரை ஆவின் மத்திய பால்பண்ணையில் இருந்து நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவின் பால் டெப்போக்கள மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடிய பால் அளவானது குறைந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் விநியோகம் என்பது அதிகாலை 3 மணிக்கு பதிலாக காலை 9 மணிக்கு தாமதமாக விநியோகம் செய்யப்படுவதால் முகவர்கள் கடுமையாக நஷ்டம் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான கரிசல்குளம், விளாங்குடி, ஆனையூர், நெல்பேட்டை, பேச்சியம்மன்படித்துறை, சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாதமாக காலை 9மணிக்கு மேல் 30க்கும் மேற்பட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் விநியோகம் தாமதமாக விநியோகம் செய்யப்பட்டுவருவதாக கூறி ஆவின் டெப்போ முகவர்கள் 10க்கும் மேற்பட்டோர் மதுரை சாத்தமங்கலம் ஆவின் மத்திய பால்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதி டெப்போக்களுக்கு செல்லும் பால் விநியோக வாகனத்தை ஆவினுக்கு திரும்ப அனுப்பிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த வாரம் பால்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டும் தொடர்ந்து ஆவின் பால் தட்டுப்பாடு நிலவிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து முகவர்களின் முற்றுகை போராட்டத்தையடுத்து ஆவின் நிறுவன அதிகாரிகள் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனிடையே வரும் 11ஆம் தேதியன்று ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7ரூபாய் உயர்த்தி அறிவிக்க கோரி பால் மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரையில் வரும் 11ஆம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் தொடர் பால் நிறுத்த போராட்டம் மற்றும் கருப்புகொடி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பால் நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 1லட்சம் லிட்டர் பால் நிறுத்தம் செய்யப்படவுள்ளதால் மதுரை மாவட்டத்தில் ஆவின்பால் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion