கொரோனா தடுப்பூசி முகாம்: தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் 31368 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 31368 பேருக்கு முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 31368 பேருக்கு முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவம் அதிகமாகி இருந்தது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பல்வேறு உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிசீல்ட் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்து வந்தது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் சுகாதாரத்துறை சார்பாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
BFH: அத்துமீறும் சினிமா போஸ்டர்... அதை பிரபலமாக்கும் முன்னணி நிறுவனம்!
இந்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று கொரோனா தடுப்பூ முகாம்கள் நடத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் 34-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 671 இடங்களில் நடந்தது. இந்த முகாம்களில் மூலம் ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 267 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 16 ஆயிரத்து 526 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 18 ஆயிரத்து 572 பேருக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17 லட்சத்து 45 ஆயிரத்து 970 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம், போடி நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
TNPSC GROUP 1: ரூ.2.05 லட்சம் ஊதியம்; டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- இன்றே கடைசி- முழு விவரம்!
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,925 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 429 பேருக்கு முதல் தவணையும், 13 ஆயிரத்து 260 பேருக்கு 2-ம் தவணையும், 31 ஆயிரத்து 368 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரேநாளில் 45 ஆயிரத்து 57 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்