(Source: ECI/ABP News/ABP Majha)
TNPSC GROUP 1: ரூ.2.05 லட்சம் ஊதியம்; டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- இன்றே கடைசி- முழு விவரம்!
92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 22ஆம் தேதி) நிறைவு பெறுகிறது.
92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 22ஆம் தேதி) நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வுக்கு அறிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணிகள்:
துணை ஆட்சியர் (18) - Deputy Collector,
காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26) - Deputy Superintendent of Police,
வணிகவரி உதவி ஆணையர் (25) - Assistant Commissioner (Commercial Taxes),
கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13)- Deputy Registrar of Cooperative Societies,
Assistant Director of Rural Development,
District Employment Officer in Tamil Nadu General Service உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-08-2022
விண்ணப்பித்த பின் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதி: 27.08.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் முதல் 29.08.2022 - இரவு 11.59 வரை
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 30-10-2022 காலை 9.30 முதல் 12.30 மணி வரை
*அடுத்த தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்ச வயதானது, சில பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது.
காலி பணியிடங்கள்: 92
சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700
விண்ணப்பக் கட்டணம்:
பதிவுக் கட்டணம்: ரூ.150
முதல் நிலைத் தேர்வுக்கான கட்டணம்: ரூ.100
முதன்மைத் தேர்வுக்கான கட்டணம்: ரூ.200
கட்டணமில்லாமல் விண்ணப்பிப்பது எப்படி?
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல எம்பிசி/ டிஎன்சி பிரிவினர் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதலாம்.
பிசி, பிசி முஸ்லிம் பிரிவினருக்கும் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதும் வசதி வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 முறை இலவச வாய்ப்பு உண்டு.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கும் முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: மேலும் உடற்தகுதியும் சில பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் பணி குறித்த, விரிவான தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.