Manipur Issue: மணிப்பூர் கலவரம் தொடர்பாக மதுரை யானை மலை மீது போராட்டம் நடத்திய 120 பேர் மீது வழக்கு பதிவு
பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு காரணமான கயவர்களை கைது செய்து தூக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஒத்தக்கடை யானை மலை மீது நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை, மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கபோக்பி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் யானை மலை மீது ஏறி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!
அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு நியமிக்க வேண்டும், மணிப்பூர் அரசு ஆளுநர் ஆகியோரை கண்டித்து பாராளுமன்றத்தில் திருமணம் நிறைவேற்ற வேண்டும், குற்றம் செய்த கயவர்களுக்கு மணிப்பூர் மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 120 பேர் மீதும் இரண்டு பிரிவின் கீழ் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்