மேலும் அறிய

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!

கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
 
Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்  போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும்.  இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக இந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.  சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, தொடர்ந்து நிறைவு பெற்றுவருகிறது. தற்போது கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளரை, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, ப்புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சமயத்தை தவிர மற்ற சமயங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக 22 கோடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டர் புதிய தார்சாலையும் அமைக்க நெடுச்சாலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த சாலை பணியானதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிந்து ஜனவரி முதல்வாரத்தில் திறக்கப்படும் எனவும் பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இது குறித்து கீழக்கரை பகுதி மக்கள் கூறுகையில்..,” அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி எங்கள் கிராமத்தில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான ஒன்று. தற்போது கட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல பிரமாண்டமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி வளர்ச்சியடையும். இந்த மைதானத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் ஜல்லிக்கட்டை காண முடியும்” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: நெருங்கும் புயல்; 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு- நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Embed widget