Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
சிறுநீர் என்பது மனிதர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஒரு திரவ கழிவுப்பொருள் ஆகும். இதன்மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான நீர், யூரியா மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கழிவுகள் ஆகியவை வெளியேற்றப்படும்.

நம்முடைய உடலில் தலை முதல் கால் வரை உள்ள உள்ளுறுப்பும் சரி, வெளியுறுப்பும் சரி மிக மிக முக்கியமான ஒன்றாகும். அவற்றின் ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியமாகும். இப்படியான நிலையில் சமீபகாலமாக மக்களிடையே சிறுநீரகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றது. எனினும், சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சிறுநீரகப் பிரச்சினைகளை அடையாளம் காண முடியும் என்று சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
சிறுநீர் என்பது மனிதர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஒரு திரவ கழிவுப்பொருள் ஆகும். இதன்மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான நீர், யூரியா மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கழிவுகள் ஆகியவை வெளியேற்றப்படும். இரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்பட்டு அவை சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பை சென்று பின் உடலை விட்டு வெளியேறுகிறது. இந்த சிறுநீர்ப்பாதையில் தொற்று, நீரிழிவு நோய், கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது சிறுநீரகத்தை பாதிக்கக்கூடியதாகும்.
இந்த நிலையில் நாம் எடுக்கும் உணவு, நீராகரங்கள், நீரிழப்பு அல்லது சில மருந்துகள் காரணமாக சிறுநீரின் நிறம் மாறக்கூடும். அதனை நாம் அனுபவித்திருக்கலாம். ஆனாலும், வெளிப்படையான காரணமின்றி சிறுநீரின் நிறம் அசாதாரணமாக இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை உங்களுடைய சிறுநீரகங்கள் சேதமடைய தொடங்குவதாக இருந்தால் சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக மாறக்கூடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அது அடர் நிறத்தில் தோன்றும். சில நேரங்களில் அது சிவப்பு நிறத்தில் தோன்றலாம். அடர் நிற சிறுநீர் எப்போதும் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்காது. அதனை மீண்டும் உறுதி செய்ய தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் சிறுநீரை சோதனை செய்யலாம்.
தொடர்ச்சியாக சிறுநீர் நிறம் மாறுபட்டிருந்தால் சரியான காரணத்தைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் அவசியமாகும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவக் கழிவுகளை வெளியேற்றும்போது உப்பு, தாதுக்கள் மற்றும் நீரின் சமநிலையைப் பராமப்படுகின்றன. சிறுநீரகங்கள் பலவீனமடையும்போது உடலில் கழிவுகள் குவியத் தொடங்கும். இதனால் வயிறு வீங்குதல், மூச்சுவிட சிரமம், சோர்வு நிலை, இரவில் அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.
இப்படியான சூழலில் சிறுநீரில் புரதம் அல்லது இரத்தத்தின் அளவு அதிகரித்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு பதிலாக அடர் பழுப்பு, வெளிர் பழுப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறத்தில் வெளிவரும். உடலில் உள்ள நீர்ச்சத்து சரியாக உள்ளது என்றால் மட்டுமே வெளிர் மஞ்சள் நிறத்தி இருக்கும். அடர் மஞ்சள் நிறம் நீரிழப்பின் அறிகுறி என்பதை உணருங்கள். நுரை அதிகமாக வந்தால் புரதம் அதிகமாக உள்ளது என்று அர்த்தமாகும். சிவப்பு நிறத்தில் வந்தால் உணவு அல்லது இரத்தம் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.





















