மேலும் அறிய

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டம் என தகவல்

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்துவந்த அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மருத்துவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் முடித்துவைக்கப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிட் திவாரி கூறியுள்ளார். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!
 
இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில்  கடந்த மாதம் 1 ஆம் தேதி அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30-ம்தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். 

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!
 
முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையாக நேற்று காலை திண்டுக்கல்லில் வைத்து 20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அவரை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தியதை தொடர்ந்து மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 50க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு  படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி! 
 
முன்னதாக சோதனைக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய  பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.  முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு இரவு உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் கோயம்புத்தூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட CRPF படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வருகை தந்து பாதுகாப்பிற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்  ஏற்கனவே இந்தோ திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால் CRPF படையினரை அனுமதிக்க முடியாது என கூறினார். அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து CRPF அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கு மேலாக வெளியிலேயே காத்துக்கிடந்தனர். இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையின் போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அம்ரித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் யாரையும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா? என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
 
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!
இதேபோன்று அம்ரித் திவாரி லஞ்சம் பெற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்ரித் திவாரி பயன்படுத்திய அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP சத்யசீலன்  தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய அதிகாலை 6 மணியை கடந்தும் 12 மணி நேரத்தை தாண்டி சோதனையில் கட்டுகட்டாக ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் பல்வேறு லேப்டாப்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களையும் கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டுவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஸ்கெட்ச்! சோதனையில் சிக்கிய ஆவணங்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!
 
இதேபோன்று கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின்  வங்கிக் கணக்கு பண பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் பதிவிட்டுள்ள தகவல்கள் மற்றும் அங்கித் திவாரி கையாண்ட வழக்குகளுக்கான ஆவணங்களையும் கைப்பற்றி சோதனை நடத்தினர். முன்னதாக சோதனையின் போது ஆவண பணிகளுக்காக பிரிண்டர் எடுத்துசெல்லப்பட்டு சோதனையின் போது கைப்பற்றிய ஆவணங்களை நகல் எடுத்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget