மதுரை: முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35% அதிகரிப்பு
கடந்த ஜூன் மாதம் மட்டும் தெற்கு ரயில்வே 3.114 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மதுரை கோட்டம் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 78.54 கோடி ஈட்டியுள்ளது. இதுகடந்த ஆண்டை காட்டிலும் 35.04 சதவீதம் அதிகமாகும். மேலும் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 33.14 சதவீதம் அதிகமாகும். இந்த காலாண்டில் 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
இந்த நிதியாண்டின் முதல் காலண்டான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மதுரை கோட்டம் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 78.54 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 35.04 சதவீதம் அதிகமாகும்.@drmmadurai | @GMSRailway | @TN_RailNews | @gmscrailway | @RailMinIndia | #Madurai
— Arunchinna (@iamarunchinna) July 11, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்