Viral Video : "இந்த நிமிஷம்தான் நிஜம்” : பாடம் எடுத்த ஜொமேட்டோ ஊழியரின் சூப்பர் ஸ்டெப்ஸ்..
Zomato Executive dance: உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ ஊழியர் பணியில் இருக்கும்போது நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
Zomato Executive Dance: உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ ஊழியர் பணியில் இருக்கும்போது நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
டெல்லி: ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்று ஜொமேட்டோ(Zomato). இதை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு மாநிலத்தற்கும் லட்சக்கணக்கான பேர் வேலை செய்து வருகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக உணவு விநியோகம் செய்யப்படும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வெயில் மழையென்று பாராமல் எல்லா நேரத்திலும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகின்றனர். மக்களுக்கு உரிய நேரத்தில் உணவை டெலிவரி செய்கின்றனர். சில நேரம் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களது வாகனத்தில் அவசரமாக சென்று உணவை விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் பல ஊழியர்கள் விபத்தை சந்தித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
View this post on Instagram
இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலையிலும் தனது கஷ்டத்தை ஒரு பொருட்டாக நினைக்காமல் வாடிக்கையாளருக்கு உணவை டெலிவரி செய்துவிட்டு வீட்டிற்கு வெளியே சந்தோஷத்தை வெளிபடுத்தும் வகையில், இந்த நிமிடம்தான் நிஜமானது என உணர்த்தும் வகையில் நடனம் ஆடினார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
நம் வாழ்க்கையில் எந்த கஷ்டங்கள் வந்தாலும் அதனை தூக்கி எரிந்துவிட வேண்டும். அதுபோன்று உணவு டெலிவரி செய்பவர்கள் ஒரு உணவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்குள் பல இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் ஒரு வீட்டிற்கு டெலிவர் செய்து விட்டு அந்த வளாகத்தில் நடந்து வரும்போது பின்னணியில் வரும் ஒரு இசையை கேட்டு தன்னை அறியாமல் தனது கை, கால்களை அசைத்து ஜொமேட்டோ ஊழியர் ஒருவர் நடினம் ஆடினார். இதை பார்க்கும்போது நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அவர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது போன்று அவர் நடனம் உள்ளது. இதற்கு பலர் கருத்துகளையும், அன்பையும் இணையத்தில் குவித்து வருகின்றனர். உணவு டெலிவரி செய்த வீட்டில் இருக்கும் ஒருவர் ஜொமோட்டோ ஊழியர் நடனம் ஆடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.