மேலும் அறிய

Zoho Sridhar Vembu : சமஸ்கிருதத்தை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு மென்பொருள்.. அப்டேட் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

சமஸ்கிருதத்தை இடைநிலை மொழியாக பயன்படுத்தி இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருளை ஜோஹோ உருவாக்கி வருகிறது.

ஐடி நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் என்றாலே மெட்ரோ நகரங்களில் இருந்துதான் செயல்படும். இதை மாற்றி கார்ப்ரேட் நிறுவனங்கள் கிராமத்திலும் செயல்படும் என்பதை அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர் வேம்பு. 

இவரது ஜோஹோ நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது என்றாலும், தென்காசி அருகே உள்ள தனது சொந்த கிராமத்தில் அலுவலகத்தை அமைத்து, அங்கு சில பொறியாளர்களுடன் பணி செய்து வருகிறார் ஸ்ரீதர் வேம்பு.

சமீபத்தில், வேம்புவின் ஜோஹோ நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டு வருவாயாக ஈட்சி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், சமஸ்கிருதத்தை இடைநிலை மொழியாக பயன்படுத்தி இயந்திர மொழிபெயர்ப்பு மென்பொருளை ஜோஹோ உருவாக்கி வருகிறது.

இயந்திர மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையையோ அல்லது பேச்சையோ மொழிபெயர்க்கும் ஒரு கணினி பொறிமுறையாகும். இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற ஜோஹோ நிறுவனத்தின் ஆண்டு தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய வேம்பு, "நீங்கள் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையில் மொழிபெயர்க்கும்போது, ​​முதலில் பொதுவான வடிவத்திற்கு அதை எடுத்த செல்ல வேண்டும். 

அங்கே முழு புள்ளியும் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியின் ஒரு அம்சம், அது மிகவும் துல்லியமாகவும் இருக்கிறது. இது தெரிந்த விஷயம். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்லய. ஆனால், மென்பொருளில் இதை யாரும் சரியாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.

தொழில்நுட்பத் துறையில் நிறைய நேரம், நம்பிக்கைக்குரிய ஒரு யோசனை மறக்கப்பட்டு கைவிடப்பட்டது. வளர்ச்சி குறைவதைக் கண்டு வருகிறோம். நீங்கள் துறைு முழுவதும் பார்க்கலாம். எங்களிடம் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு தொகுப்பு உள்ளது. மிகவும் மலிவு விலையில் தீர்வை வழங்குகிறோம். ஆனால், நாங்கள் பொருளாதாரத்தின் மிகப்பெரிய மிக பிரச்னையான கட்டத்தில் இருக்கிறோம். நடுக்கம் ஏற்கனவே தெரிகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சியானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினால் உந்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் Zoho அப்ளிகேஷன்களுக்கு மாறின. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கிறது.

ஜோஹோவில், தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிக பணிவுடன் செயல்பட வேண்டும் என்று எப்போதும் நம்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, கோடிங் செய்வதால் எங்களால் அதிக உணவை வழங்கவோ புதிய ஆற்றலைத் தொகுக்கவோ முடியாது. 

துரதிர்ஷ்டவசமாக, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் வேகமாக மோசமடைந்து வரும் பின்னணியில், நமது தொழில்துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், தொழில்நுட்பவியலாளர்களாகிய நமது சொந்த வரம்புகளை நினைவூட்டுகின்றன" என்றார்.

சென்னையை தளமாகக் கொண்ட ஜோஹோ நிறுவனம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகத்தைக் மேற்கொண்டு வருகிறது. கடந்த 25 ஆண்டு செயல்பாடுகளில் 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர் தளத்தை உருவாக்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Embed widget