மேலும் அறிய

ஆப்பிள் ஐஓஎஸ் யூடியூபில் இனி இந்த ஆப்ஷன் இல்லை! - நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

ஐஓஎஸ் வழியாக யூட்யூப் உபயோகிப்பவர்களுக்கு இந்த வசதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

யூட்யூப் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது வேறொரு வீடியோவுக்குத் தாவவேண்டும் என்றால் 
அந்த வீடியோவில் இருந்து வெளியேறினால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும். ஆனால் வீடியோவுக்குள் வீடியோ முறையைக் கொண்டு வந்து பார்வையாளர் வசதிக்கு ஏற்ப மாற்றியது யூட்யூப் தளம். கடந்த 2021 ஜூன் மாதத்தில் ஆப்பிளின் ஐஓஎஸுக்கும் இந்த வசதியை யூட்யூப் நிறுவனம் கொண்டு வந்தது. 10 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது அந்த வசதியை ஐஓஎஸ் தளத்தில் இருந்து நீக்குவதற்கு யூட்யூப் முடிவு செய்துள்ளது.

9டு5கூகுள் தளத்தின் அறிக்கையின்படி, ஐஓஎஸ்ஸில் இந்த வசதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் வழியாக யூட்யூப் உபயோகிப்பவர்களுக்கு இந்த வசதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, யூடியூப் பிரியர்களுக்கு பிடித்த செயலியான  Youtube Vanced தன்னுடைய சேவையை திடீரென நிறுத்தியுள்ளது. சட்ட ரீதியாக கூகுள் கொடுத்த எச்சரிக்கையை அடுத்து தன்னுடைய பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது Youtube Vanced.

யூடியூப்..

வீடியோ செயலிகளில் முதன்மையானது யூடியூப். எந்த வீடியோவாக இருந்தாலும் யூடியூப்பில் சென்று தேடுவதுதான் முதல்வேலை. யார் வேண்டுமென்றாலும் தனிக் கணக்கு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ பதிவேற்றலாம். அதனை மற்றவர்கள் பார்க்கும் பட்சத்தில் பார்க்கும் நபர்களுக்கு ஏற்ப ஒரு தொகை கொடுக்கப்படும். இதற்காக பலரும் பல்வேறு தலைப்புகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கும் சில விதிமுறைகள் உண்டு.

யூடியூப் நிறுவனம் Community Guidelines என்ற பெயரில் சமூக வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் யூடியூப் தளத்தில் பதிவிடப்படும் வீடியோ, கமெண்ட், லைக்ஸ், முகப்புப் படம் முதலான அனைத்திற்கும் பொருந்தும். மேலும், இவை யூடியூப் தளத்தில் எந்த வகையான படைப்புகள் இடம்பெறக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை யூடியூப் நிறுவனம் மனிதர்கள், செயற்கைத் தொழில்நுட்பம் ஆகிய இரு தரப்பின் மூலமாகவும் அமல்படுத்துகிறது. மேலும், இந்த நெறிமுறைகள் ஒரு சேனல் உரிமையாளரின் பின்னணி, அரசியல் நிலைப்பாடு, அதிகாரம் முதலான எந்த அடிப்படையிலும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்தப்பட்டிருப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் யூடியூப் சேனல் நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்..

வீடியோ நடுவே ஓடும் விளம்பரங்களை வைத்து யூடியூப் காசு பார்க்கிறது. உங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லையென்றாலும் அதற்காகவும் தனி ப்ரீமியம் பேக்கேஜ் முறையை கூகுள் வைத்துள்ளது. இப்படி ஒரு திட்டமிடலாக சென்றுகொண்டிருந்தாலும் சில ஆப்கள் யூடியூப்க்கு எதிராக செயல்பட்டு வந்தன. அப்படியான ஒரு செயலிதான் Youtube Vanced. ப்ரீமியம் அக்கவுண்ட் இல்லாமலேயே விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோக்களைப் பார்க்க இந்த ஆப் உதவியது. ஆனால் இந்த செயலியால் யூடியூப்பின் வருமானவே அடிவாங்கும் என்பதால் சட்டரீதியாக எச்சரிக்கை விடுத்தது கூகுள். அந்த எச்சரிக்கைக்கு Youtube Vanced பணிந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget