Watch Video : அசாத்திய துணிச்சல்..! அளவில்லா பாசம்..! மலைப்பாம்பிடம் மோதி நாயை காப்பாற்றிய சிறுவர்கள்..!
மூன்று சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் செல்லப்பிராணியான நாயை மலைப்பாம்பிடம் இருந்து காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணி என்றாலே நமக்கு எல்லாரும் கொள்ளைப் பிரியம். வீட்டில் உள்ள ஒரு நபராக செல்லப்பிராணியை தங்களில் வீட்டில் உள்ள ஒரு நபராக மக்கள் கருதுகின்றனர். உலகெங்கிலும் செல்லப்பிராணிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நாய்கள். நன்றி, விஸ்வாசம் என்று அன்புக்கும், உண்மைக்குமான உருவமாக நாய்கள்தான் விளங்குகிறது.
இந்த நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நாய் ஒன்றின் உடலை பின்னிப் பிணைந்து எங்கும் நகர முடியாத அளவிற்கு சுற்றி வளைத்துள்ளது. இதனால், நாய் எங்கும் நகர முடியாமல் அதே இடத்தில் இருந்தது.
Big slaute to these guys pic.twitter.com/jjY2AllVxH
— Shocking Videos (@ShockingClip) August 6, 2022
தங்களின் செல்லப்பிராணியான நாய், மலைப்பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட அவதிப்படுவதை அந்த நாயின் உரிமையாளர்களான மூன்று சிறுவர்கள் பார்த்தனர். இதைக்கண்டு அவர்கள் பயந்து ஓடாமல், மூன்று பேரும் கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு பாம்பை அடித்து துவம்சம் செய்தனர். அவர்களில் ஒரு சிறுவன் மிகவும் துணிச்சலாக பாம்பின் கழுத்தைப் பிடித்து இழுத்தான்.
உடனே மற்றொரு சிறுவன் பாம்பின் மறுமுனையைப் பிடித்து இழுத்தான். உடனே, இன்னொரு சிறுவன் பாம்பின் உடலை நாயின் உடலில் இருந்து சட்டென்று பிரித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவர்கள் நாயை சுற்றி வளைத்த பாம்பை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். இதனால், மலைப்பாம்பிடம் சிக்கி உயிருக்கு போராடிய நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
சிறுவர்களின் துணிச்சலான இந்த சாகச காரியத்தை அங்கிருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் செல்ல நாயை போராடி காப்பாற்றிய சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
மேலும் படிக்க : Watch Video: பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கி புல் அப்ஸ்! கின்னஸ் சாதனை படைத்த யூட்யூபர்
மேலும் படிக்க : ஒன்றரை வயது குழந்தை வாயில் 'வோட்கா' ஊற்றிய தாய்! வீடியோ எடுத்த தந்தை - தேடி வந்த போலீஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்