ஒன்றரை வயது குழந்தை வாயில் 'வோட்கா' ஊற்றிய தாய்! வீடியோ எடுத்த தந்தை - தேடி வந்த போலீஸ்!
ஒன்றரை வயதுடைய குழந்தையின் வாயில் பெற்றோர்களே வோட்கா ஊத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒன்றரை வயதுடைய குழந்தையின் வாயில் பெற்றோர்களே வோட்கா ஊத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை தொடர்ந்து மிச்சிகனில் உள்ள அமெரிக்க கவுண்டி கென்ட் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தையின் தாய் இந்த கொடூர செயலை செய்ததாகவும், அதற்கான வீடியோவை குழந்தையின் தந்தைதான் எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. வோட்கா பாட்டிலை கையில் வைத்திருக்கும் குழந்தையின் தாய் முதலில் வோட்கா பாட்டிலின் மூடியில் சிறிதளவு வோட்காவை ஊற்றுகிறார். அதனை தொடர்ந்து ஊத்திய அந்த வோட்காவை குழந்தையின் வாயில் மருந்தை ஊற்றுவதுபோல் ஊற்றுகிறார். இது அனைத்தும் அந்த வீடியோவில் நான் தெளிவாக காண முடிகிறது.
மேலும் படிக்க : Watch Video: இறைச்சி வேணுமா இங்க வா! புலியிடம் வீரத்தை காண்பித்த ஓட்டுநர்.! பதற வைத்த வீடியோ!
குழந்தையின் தந்தை ஷார்ட்ஸ் மற்றும் டி சர்ட் உடன் இந்த காட்சியை படமாக்கி குற்றத்திற்கு உடந்தையாக இருக்கிறார். இந்த வீடியோவிற்கு பின்னால் உரத்த இசையும் கேட்கிறது.
இது தொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அந்தப் பகுதியில் உள்ள ஒரு முகவரியில் குழந்தை ஒன்றை கொடுமை படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட குழந்தையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நாளில் குழந்தை கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
ஜாமீனில் வெளிவந்த பிறகும் அந்த குழந்தை பெற்றோரிடம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதையடுத்து இணையத்தில் இந்த ஜோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து மக்கள் கூறியதாவது: "இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன், ஆனால் அது நீக்கப்பட்டது." என்றனர்.
மேலும், "குழந்தை உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதை அந்த வீட்டிற்கு வெளியே உள்ளவர்கள் எப்படி அறிவார்கள்? குழந்தையை பெற்றோரிடம் திருப்பி அனுப்புவது கொடுமையானது. பெற்றோருக்குரிய திறன்களை அவர்களுக்குக் கற்பிப்பதற்கான வசதியில் சில தீவிர நேரத்தைச் செய்ய வேண்டும். இதற்கிடையில், குழந்தையின் பாதுகாப்பிற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்." என்றும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்