வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிகள் தயாராக இருந்து வரும் நிலையிலும் பொதுமக்கள் தடுப்பூசி போட முன்வராததது, அரசின் கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் 2019-ம் ஆண்டு முதன் முதலில் சீனாவில் இருந்து  தன் ஆளுமையை தொடங்கியது. கொரோனா வைரஸ் மற்ற வைரஸ் கிருமிகளை போலவே பல உருமாற்றங்களை பெற்று இன்று கொரோனா 2-வது அலையாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.  இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் குறிப்புகளின்படி  புதன்கிழமை மட்டும் இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சம்  புதிய கோவிட் -19 நோயாளிகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு , இந்தியாவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும்  நபர்களின் எண்ணிக்கையை 1,23,36,036 ஆக உயர்த்தியுள்ளது .வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்
 
குறிப்பாக தமிழகத்தில் புதன் அன்று மட்டும் புதிதாக 3,677 நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டுடறியப்பட்டு,  தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,985  ஆக உயர்ந்துள்ளது . ஒருபுறம் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவினாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ  தரவுகளின்படி இது வரை இந்தியா வில் 11.11 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதில் தமிழ் நாட்டிற்கு மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 54 லட்சம் தடுப்பூசிகளில் 37 லட்சம் தடுப்பூசிகளே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.  வீணாகிறதா தடுப்பூசி: ஆர்வம் காட்டாத மக்கள்
இது குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறும் போது , மற்ற மாநிலங்களை  விட தமிழ் நாட்டில் குறைந்த அளவே கோவிட் தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் சோகமான செய்தி, மருத்துவம் படித்த மருத்துவர்களே கோவிட் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதுதான். 
தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5  லட்சம் கோவிட் தடுப்பு மருந்துகளை செலுத்தும் அளவுக்கு 5 ,000 கோவிட் தடுப்பூசி மையங்கள்அமைக்கபட்டுள்ளது . 
மத்திய மாநில அரசுகளின் துணையோடு தமிழ் நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் , பட்டித் தொட்டி எங்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் ஊரடங்கு என்பதற்கே அவசியமில்லை. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.

Tags: Vaccine COVID abp abp nadu abp news

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !