Watch Video: ஜன்னல் வழியாக திருட முயற்சி.. மாட்டிக்கொண்டு படாதபட்ட இளைஞர்.. வைரலாகும் வீடியோ..
பீகாரில் ஜன்னல் வழியாக ரயில் பயணியிடமிருந்து மொபைல் போனைப் பறிக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.
பீகாரில் ஜன்னல் வழியாக ரயில் பயணியிடமிருந்து மொபைல் போனைப் பறிக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. திருட முயன்றபோது, மாட்டி கொண்ட அந்த நபரின் கைகளை பயணிகள் பிடித்துள்ளனர். இதன் காரணமாக, கைகளை ஜன்னலுக்கு உள்ள விட்டபடி அவர் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
Mobile thief hanged in a moving train for 15 km In Bihar
— Akshay Pandey (@akshay019) September 15, 2022
Read News- https://t.co/Hg0MXi0Qdn pic.twitter.com/2wIJxKjvkq
பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டபடி கெஞ்சுவதும் பயணிகள் அவரை கீழே விழாதவாறு பிடித்து கொள்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 14 அன்று வெளியான வீடியோ பீகாரில் எடுக்கப்பட்டது. அங்கு ரயிலின் ஜன்னல்கள் வழியாக போன்கள் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.
சம்பவம் நடந்த ரயில் பெகுசராயிலிருந்து ககாரியா வரை சென்று கொண்டிருந்தது. பயணம் முடியும் தருவாயில் இருந்தபோது, சாஹேப்பூர் கமால் ஸ்டேஷன் அருகே அந்த நபர் தனது கையை ஜன்னலுக்கு உள்ளே விட்டு திருட முயற்சித்துள்ளார். ஆனால், எச்சரிக்கையாக இருந்த பயணி அவரது கையை பிடித்துவிட்டார்.
ரயில் நகர்ந்தபோது, அவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். இறுதியில், கீழே விழுந்து விடாமல் இருக்க தன்னுடைய இரண்டாவது கையையும் ஜன்னுக்கு உள்ளே விட்டு, தொங்கியபடி, பயணம் செய்தார்.
கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் இப்படியே பயணம் செய்தார். இறுதியாக, ககாரியாவுக்கு அருகில் ரயில் வந்தபோது, அவர் விடுவிக்கப்பட்டார். உடனேயே அவர் ஓடிவிட்டார் என அப்பகுதி மக்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். போலீசார் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
Thief Tries To Snatch Phone From Moving Train, Dangles From Window As Passengers Grab His Arms. Watch Video pic.twitter.com/Mf3Yp5Himj
— ABP LIVE (@abplive) September 15, 2022
ஜூன் மாதத்தில் வைரலான மற்றொருவர் இணையத்தையே கலக்கி உள்ளார். இணையவாசிகள் சிலர் அவரை "புதிய ஸ்பைடர் மேன்" என்று அழைத்தனர். பீகாரில் ஒரு ரயிலுக்குள் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில், பாலத்தின் மீது அமர்ந்திருந்த பிக்பாக்கெட் நபர் ஒரு பயணியின் பணப்பையை ஜன்னல் வழியாக பிடுங்குவதைக் காணலாம்.