Uttar Pradesh: சாப்பாட்டுல வெங்காயம், பூண்டு சேர்த்த மருமகள்..! போலீஸ் ஸ்டேஷன் படியேறிய மாமியார்!
இதற்கு முன்பும் தனது மருமகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
![Uttar Pradesh: சாப்பாட்டுல வெங்காயம், பூண்டு சேர்த்த மருமகள்..! போலீஸ் ஸ்டேஷன் படியேறிய மாமியார்! Uttar Pradesh: Noida Woman files complaint against daughter-in-law for putting onion garlic in her food Uttar Pradesh: சாப்பாட்டுல வெங்காயம், பூண்டு சேர்த்த மருமகள்..! போலீஸ் ஸ்டேஷன் படியேறிய மாமியார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/13/92c98e187331d760c178f21edf1835d7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உணவில் வெங்காயம், பூண்டு போட்டதாக மருமகள் மீது மாமியார் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் 80 வயதான பனார்சி தேவி என்ற பெண், தனது மருமகள் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை வைத்து துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மருமகள் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். மருமகள் உணவில் பூண்டு பயன்படுத்துவதாகவும், தன்னை எரிச்சலூட்டும் வகையில் சமையலறையில் அழுக்குப் பாத்திரங்களை வைத்திருப்பதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். தற்போது அந்த பெண் தனது மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: chennai: கழுத்தை நெறித்து மனைவி கொலை! தூக்கமாத்திரை சாப்பிட்டதாக கதை! சிக்கிய கணவர்!!
பனார்சி தேவியின் மகன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிகாவை மேட்ரிமோனியல் தளம் மூலம் திருமணம் செய்து கொண்டார். பனார்சி தேவி தனது புகாரில், ஹர்ஷிகா தன்னைத் துன்புறுத்துவதாகவும், தனது மகன் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு தன்னைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். பீரோவில் இருந்து ஆபரணங்களையும் பணத்தையும் ஹர்ஷிகா ரகசியமாக எடுத்ததாகவும் பனார்சி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கேட்டபோது ஹர்ஷிகா தன்னை அறைக்குள் தள்ளி பூட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் தனது மருமகள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சில காலத்திற்கு முன்பு வீட்டிற்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும், ஆனால் அவை ஹர்ஷிகாவால் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)