மேலும் அறிய

chennai: கழுத்தை நெரித்து மனைவி கொலை! தூக்கமாத்திரை சாப்பிட்டதாக கதை! சிக்கிய கணவர்!!

மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூக்க மாத்திரை சென்னை பிராட்வே புத்தி சாகிப் தெருவில் உள்ள வீட்டின் 2-வது மாடியில் வசித்து வருபவர் 37 வயதான அப்துல் ரகுமான். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்துல் ரகுமானுக்கு யாஸ்மின் என்ற மனைவியும் உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமான், தனது மனைவி யாஸ்மின், தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்ததாக கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஸ்மின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் யாஸ்மினின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அதில் யாஸ்மின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் அப்துல் ரகுமானை அழைத்து விசாரணை செய்தனர். அதில் அப்துல்ரகுமான், தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரிந்தது.

இதுபற்றி போலீசாரிடம் அப்துல்ரகுமான் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மனைவி யாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த நான், எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நான் எவ்வளவு கண்டித்தும் கள்ளத்தொடர்பை யாஸ்மின் கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த நான், யாஸ்மினுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இதனால் அவர் அயர்ந்து தூங்கினார். அப்போது எனது மனைவி யின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.. பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினேன். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானதால் நான் சிக்கிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து யாஸ்மினின் தாயாரான துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த பரிதா பானுவிடம் புகாரை பெற்ற போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இது தொடர்பாக அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget