மேலும் அறிய

UPSC: வெடிக்கும் சர்ச்சைகள்..! மோடிக்கு நெருக்கமான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா - காரணம் என்ன?

UPSC: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மனோஜ் சோனி, பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் சூழலில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPSC: மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (UPSC) மனோஜ் சோனி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPSC தலைவர் ராஜினாமா?

கடந்த 2017ம் ஆண்டு UPSC அமைப்பின் உறுப்பினரான  சோனி, கடந்த 2023ம் ஆண்டு மே 16ம் தேதி அந்த அமைப்பின் தலைவரானார். அவரது பதவிக்காலம் வரும் 2029ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் முன்பே மனோஜ் சோனி ராஜினாமா கடிதம் அனுப்பியும், அவரது முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், மனோஜ் சோனியின் ராஜினாமா முடிவுக்கும், போலி சான்றிதழ்களை கொடுத்து மத்திய அரசு பணி பெறுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறப்படுகிறது.

ஆன்மீக தொண்டில் ஈடுபட முடிவு

குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் ஒதுக்க மனோஜ் சோனி விரும்புவதாக கூறப்படுகிறது. அவர் கடந்த 2020 இல் தீட்சை பெற்று அந்த பிரிவில் ஒரு துறவி ஆனது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் UPSC  தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கும், தற்போது நிலவும் சர்ச்சைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.

யார் இந்த மனோஜ் சோனி?

மனோஜ் சோனி பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் 40 வயதாக இருந்தபோது வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதனால் நாட்டின் இளம் வயது துணைவேந்தர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஜூன் 2017ம் ஆண்டு UPSC-க்கு அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணைவேந்தராக பணியாற்றினார்.  பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (BAOU) துணை வேந்தராக,  2015 வரை இரண்டு முறை பணியாற்றினார். 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்:

UPSC என்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 315-323 பகுதி XIV அத்தியாயம் II இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். ஆணையம் மத்திய அரசின் சார்பில் பல தேர்வுகளை நடத்துகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துகிறது மற்றும் ஐஏஎஸ், இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்), இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) மற்றும் மத்திய சேவைகள் - குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகியவற்றிற்கு நியமனம் செய்ய தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆணயம் ஒரு தலைவரால் வழிநடத்தப்பட, அதிகபட்சமாக 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget