Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் காவல்துறையினரின் அளித்துள்ள தகவலின்படி, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் துஹாயிலிருந்து முராத்நகர் நிலையத்திற்கு நமோ பாரத் ரயில் சென்றுக் கொண்டிருந்தது.

உத்தரப்பிரதேசத்தில் நமோ பாரத் ரயிலின் பிரீமியம் பெட்டிக்குள் இரண்டு கல்லூரி மாணவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் வீடியோவை வெளியிட்ட ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியாபாத் காவல்துறையினரின் அளித்துள்ள தகவலின்படி, கடந்த நவம்பர் 24 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் துஹாயிலிருந்து முராத்நகர் நிலையத்திற்கு நமோ பாரத் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ரயிலின் ப்ரீமியம் பெட்டியில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது. அங்கு ஒரு ஆணும், பெண்ணும் அருகருகே உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அருகிலுள்ள இருக்கைகள் காலியாக இருந்தபோது அந்த ஜோடி அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டது.
முதலில் முத்தமிட்ட கொண்ட இருவரும் ஒரு கட்டத்தில் உணர்ச்சி ரீதியில் பாலியல் உறவில் ஈடுபட தொடங்கினர். பின்னர் சில நிமிடங்களில் அவர்கள் எதுவும் நடக்காதது போல அருகருகே அமர்ந்து கொண்டனர். இப்படியான நிலையில் அந்த ஜோடியின் ஆபாச செய்கை அனைத்தும் ரயில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி கொண்டிருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான பிறகு, மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ரயில்வே துறையை கடுமையாக கண்டித்தனர். இப்படி ஒரு சம்பவம் நடந்தது ரயில்வே துறையில் மிகப்பெரிய அவமானம் என சாடினர்.
இதனையடுத்து இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு (RRTS) அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமை பாதுகாப்பு அதிகாரி துஷ்யந்த் குமார், ரயில் நடத்துநர் ரிஷப் குமார் மீது முராத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதில் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஆணும், பெண்ணும் டெல்லி-மீரட் சாலையில் உள்ள துஹாயில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பயின்று வருவதாக தெரிய வந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை ரயில் ஓட்டுநரான குமார் தனது மொபைல் போனில் படம்பிடித்துள்ளார். அதனை தனது வாட்ஸ்அப் நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். இது நமோ பாரத் சேவையின் பிம்பத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரி துஷ்யந்த் குமார் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த ரயில் நடத்துநர் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வீடியோவில் காணப்படும் இளம் ஜோடிகளின் பெயரும் FIRல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் சுரேந்திர நாத் திவாரி தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















