யுஜிசி நெட் தேர்வு; விண்ணப்பிக்கும் தேதி, கட்டணம் அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் பணிக்கும், உதவித் தொகை பெறுவதற்கும் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
உதவிப் பேராசிரியர் பணிக்கும், உதவித் தொகை பெறுவதற்கும் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியைப் பெற நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.
மொத்தம் 82 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. கணினி மூலமாக இந்தத் தேர்வு காலை, மாலை என 2 ஷிஃப்டுகளாக இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரை நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் இந்த நெட் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியாகின.
இந்த நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022ஆம் ஆண்டுக்கான யுஜிசி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தேர்வர்கள் மே 20ஆம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். திருத்தங்களை மே 21 முதல் 23ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம் என்ன?
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பொதுப்பிரிவு மாணவரும் ரூ.1,100 செலுத்த வேண்டியது கட்டாயம். ஓபிசி பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் ரூ.550 கட்டணம் ஆகும். எஸ்சி/ எஸ்டி பிரிவு மாணவர்களும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் மூன்றாம் பாலினத்தவரும் ரூ.275 செலுத்தினால் போதும்.
மாணவர்கள் ஆன்லைன் முறையில் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s301eee509ee2f68dc6014898c309e86bf/uploads/2022/04/2022043010.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்