‘எச்சரிக்கை பலகையையும் மீறி செல்ஃபி’ - தவறி விழுந்த மாமியாரும் காப்பாற்ற குதித்த மருமகளும் பலி!
இருவரும் பாறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஹன்சா நர்மதா ஆற்றில் விழுந்தார்.
நவீன உலகத்தில் செல்ஃபி எடுத்துக்கொள்வது அத்தியாவசியம் ஆகிவிட்டது. அது அளவுக்கு மீறி மோகமாய் வளர்ந்து உயிர்களும் பலியாகின்றன. ஆபத்தான் பகுதியில் பலர் செல்ஃபி எடுக்கையில் விபத்துகளை சந்தித்துள்ளனர். பலர் உயிரிழந்திருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் வசிக்கும் ஹன்சா சோனி (50) என்றும் அவர் மருமகள் ரித்தி பிச்சாடியா (22) ஆகியோர் பெராகாட்டை சுற்றி பார்க்க சென்றனர். ஹோட்டலில் தங்கிய அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புதிய பெராகாட்டை பார்வையிட முடிவு அங்கு சென்றனர்.
அப்போது இருவரும் பாறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஹன்சா, நர்மதா ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்றுவதற்காக ரித்தி நீரில் குதித்தார். ஆனால் பலத்த நீரோட்டத்தில் இருவரும் நர்மதா ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து, பார்கி பகுதியின் நகரக் காவல் கண்காணிப்பாளர் (சிஎஸ்பி) பிரியங்கா சுக்லா கூறுகையில், “மும்பையில் வசிக்கும் சோனி குடும்பத்தினர் பெராகாட்டைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கினர். வெள்ளிக்கிழமை மாலை, அவர்கள் புதிய பெராகாட்டைப் பார்வையிட முடிவு செய்தனர்.
ஹன்சா சோனி மற்றும் அவரது மருமகள் ரித்தி பிச்சாடியா ஆகியோர் பாறையில் நின்று செல்ஃபி எடுத்து கொண்டிருந்தனர். ஹன்சா தனது கட்டுப்பாட்டை இழந்து நர்மதா ஆற்றில் விழுந்தார்.
அவளை காப்பாற்ற மருமகளும் குதித்தார். துரதிர்ஷ்டவசமாக இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடுதலில், வெள்ளிக்கிழமை மாலை ஹன்சா சோனியின் சடலமும், ரித்தியின் சடலம் சனிக்கிழமையும் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டு, பெராகாட்டில் செல்ஃபி எடுக்கும்போது ஒரு சிறுவன் ஆற்றில் தவறி விழுந்தான். அவனைக் காப்பாற்றும் முயற்சியில், அவனது சகோதரி ஆற்றில் குதித்து இறந்தார்.
அந்த இடத்தில் செல்ஃபி எடுக்க தடை விதித்து எச்சரிக்கை பலகையை வைத்த மாவட்ட நிர்வாகம், மக்களின் உயிரைக் காப்பாற்ற டைவர்களையும் நியமித்தது. இருப்பினும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bulli Bai App Case: இஸ்லாமிய பெண்களை குறிவைக்கும் புல்லி பாய் ஆப்! வசமாக சிக்கிய 21 வயது இளைஞர்: கைதுக்கு பின் வெடிக்கும் சர்ச்சை