Morning Headlines: கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்.. வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines January 8: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க..
- பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து.. சுற்றுலா பயணத்தை ரத்து செய்யும் இந்திய மக்கள்..!
பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்நாட்டு சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய அடி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக லட்சத்தீவு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது பயண அனுபவம் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதில், ‘லட்சத்தீவு என்பது காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று. மேலும் படிக்க..
- பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லுமா? இன்று தீர்ப்பு
கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும் படிக்க..
- ராமர் கோயில் திறப்பு: அதே நாளில் பிரசவம்? - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணி பெண்கள்
அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..
- வங்கதேச தேர்தல்: ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி.. மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா
வங்கதேசத்தின் அரசியல் சூழல் என்பது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு மத்தியில் இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். மேலும் படிக்க..