(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம்.. கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines January 19: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- தமிழகத்தில் நாளை பேருந்துகள் ஓடுமா? போக்குவரத்து ஊழியர்கள் உடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தினருடன், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இப்பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் படிக்க.,
- சபரிமலை கோலாகலம்.. நெய்யபிஷேக வழிபாடுகளுடன் இன்றுடன் நிறைவு! குவியும் பக்தர்கள்
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக, மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க.,
- கேலோ இந்தியா விளையாட்டு கோலாகலம் - சென்னை உள்ளிட்ட 4 நகரங்கள், 27 பிரிவுகள், 5500+ வீரர்கள்..!
சென்னையில் இன்று தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் இன்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இன்று மாலை 6 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் படிக்க.,
- கருவறையில் வைக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை.. வெளியான முதல் படம் இணையத்தில் வைரல்..
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின் சில கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படமும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் குழந்தை வடிவமான இந்த சிலை மூடப்பட்டுள்ளது. வருகின்ற 22ம் தேதி சிறப்பு பூஜைக்குபின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (நேற்று) கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. மேலும் படிக்க.,
- அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா
அன்னபூரணி திரைப்படம் பார்வையாளர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என, நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மேலும் படிக்க.,