Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்
Ram lalla Idol : ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
![Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள் ayodhya ram mandir inauguration idol lord ram first photo inside temple sanctum Ram lalla Idol First Picture Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/03a862419194f38355f9e3afc781dc651705661470636729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ram Lalla Idol : அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராமரின் குழந்தை வடிவமான ராம்லல்லாவின் சிலை கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் முதல் படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகின்ற 22ம் தேதி சிறப்பு பூஜைக்குபின் இந்த சிலையின் கண்கள் திறக்கப்படும் என அறக்கட்டளை சார்பில் திறக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (நேற்று) கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது.
First image of the full Ram Lalla idol with his face uncovered and a gold bow and arrow pic.twitter.com/3Ius0V9UJX
— Akshita Nandagopal (@Akshita_N) January 19, 2024
ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளதாகவும், தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன் கிழமையே வந்த ராமர் சிலை:
முன்னதாக, புதன்கிழமை (ஜனவரி 18) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் சிலையை கொண்டு செல்ல கிரேன் உதவியுடன் எடுத்து வைக்கப்பட்டது. கருவறையில் கடவுள் அசையும் மற்றும் அசையாத வடிவில் இருப்பார். இரண்டு சிலைகளும் புதன்கிழமையே வளாகத்தை வந்தடைந்தன.
EXCLUSIVE: Wait of 500 years is over. FIRST PICTURES of Shri Ram Lala Idol placed inside the Garbh Griha of Ram Mandir 🙏🙏Jai Jai Shree Ram 🙏🙏Jai Jai Shri Ram 🙏🙏 #RamMandirPranPratishta pic.twitter.com/JtslW5jatc
— Rosy (@rose_k01) January 18, 2024
ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முதல் மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம்:
ஜனவரி 22 அன்று, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி முன்னிலையில், அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி:
(ஜனவரி 18ம் தேதி அதாவது நேற்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலையையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் இந்த மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)