Morning Headlines: 2000 ரூபாயை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு; சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு சம்மன் - முக்கிய செய்திகள்
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
-
Rs. 2000 Notes: 2000 ரூபாயை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இச்சூழலில், கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் படிக்க
- Aditya L1: 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை தாண்டி பயணித்து வரும் ஆதித்யா - இஸ்ரோ அசத்தல்
கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது. கடந்த 17 நாட்களாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்துகொண்டு இருந்த விண்கலம், தற்போது தனது முக்கிய இலக்கான லெக்ராஞ்சியன் 1 புள்ளியை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 19ஆம் தேதி, அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம், பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி பயணம் செய்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் படிக்க
- கைது செய்யப்படுகிறாரா சந்திரபாபு நாயுடுவின் மகன்? ஆந்திர அரசியலில் மீண்டும் புயலை கிளப்பிய சிஐடி
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியது. சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு எதிராக தெலங்கு தேச கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆந்திர அரசியலில் உச்சக்க்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தது. மேலும் படிக்க
- Tirumala Tirupati: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்; இலவச தரிசன டிக்கெட் ரத்து - எந்தெந்த நாட்களில்?
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் படிக்க
- TN BJP Annamalai: முறிந்த கூட்டணி; இன்று டெல்லி பறக்கிறார் அண்ணாமலை! என்ன சொல்லப்போகிறது தேசிய தலைமை?
மக்களவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போது இருந்தே காட்சிகள் மாறத்துவங்கியுள்ளன. குறிப்பாக ஒரு மக்களவைத் தேர்தல் அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பிரிக்க முடியாத கூட்டணியாக இருந்த அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது புகைச்சலை உண்டாக்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைந்த அதிமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்தும் சர்ச்சையாக பேசியது அதிமுக தலைமையை வருத்தத்திற்கு உள்ளாக்கவே இந்த முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக தலைமையே நேரடியாக கூறியது. மேலும் படிக்க