ABP Nadu, India Headlines: கொரோனா பரவல் முதல் இந்திய விண்வெளி கொள்கை 2023 வரை.. முக்கிய நிகழ்வுகள்..
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
சென்னைக்கு வரும் பிரதமரை சந்திக்க ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது..
பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பானி பழனிசாமியும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு உறுதியாகும் பட்சத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு இருவருக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். மேலும் படிக்க
பிரதமர் மோடி, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொலை மிரட்டல் விடுத்த மாணவனை கைது செய்த காவல் துறையினர்..
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மேலும் படிக்க
பிரதமர் மோடி சென்னைக்கு வருவதையடுத்து 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு மதியம் 2 மணியளவில் வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு மத்திய அரசு நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு மத்திய அரசு நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொள்கை மூலம் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பு, மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சியில் கவனத்தை செலுத்த இஸ்ரோவுக்கு உதவும். மேலும் படிக்க
ஆந்திரா பழங்குடியின கிராமத்தில் 11 பெண்கள் கூட்டுப்பாலியல் வழக்கு – 13 போலீசார் விடுவிப்பு..
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆந்திராவில் நக்சல் தடுப்புப் போலீஸார் ஒரு பழங்குடியின கிராமத்தில் துப்பாக்கி முனையில் 11 பெண்களை 13 போலீஸார் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 13 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததாகக் கூறிய நீதிமன்றம் அவர்களை மாநில அரசு தண்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட 11 பெண்களுக்கும் அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் படிக்க
உத்தாரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் மகன் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் மகன் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நல்வாய்ப்பாக காரில் இருந்த பாஜக தலைவர் மகனும் அவரது நண்பரும் நூலிழையில் உயிர் பிழைத்தனர். மேலும் படிக்க