Indian Space Policy 2023: விண்வெளி கொள்கை 2023-க்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு.. இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சம் என்ன?
இந்திய விண்வெளிக் கொள்கை 2023-க்கு மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விண்வெளிக் கொள்கை 2023க்கு மத்திய அரசு நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கையானது விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொள்கை மூலம் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பு, மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சியில் கவனத்தை செலுத்த இஸ்ரோவுக்கு உதவும். இந்திய விண்வெளிக் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோ, விண்வெளித் துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) மற்றும் இன்-ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்பை இந்த கொள்கை தெளிவாக விளக்கியுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த கொள்கை இஸ்ரோவில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கும், மேலும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குதல், தரவு சேகரிப்பு ஆகிய பணிகளில் இனி வரும் காலங்களில் தனியார் துறை பங்கேற்க அனுமதிக்கும் என குறிப்பிட்டார்.
இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் பிடிஐக்கு அளித்த தகவலில், ”விண்வெளிக் கொள்கையின் முக்கிய நோக்கம் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதாக இருக்கும், சமீபத்தில் உருவாக்கப்பட்ட INSPACe, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை இணைக்கும் அங்கமாக இருக்கும் என்று கூறினார். மேலும், தனியார் துறையினர் இஸ்ரோவில் இருக்கக்கூடிய வசதிகளை பயன்படுத்தி புதிய உள்கட்டமைப்பை உருவாக்க முதலீடு செய்ய ஊக்குவிக்கிறது. இஸ்ரோ, விண்வெளித் துறைக்கான எந்த செயல்பாட்டு மற்றும் உற்பத்திப் பணிகளைச் செய்யாது என்றும், புதிய தொழில்நுட்பங்கள், புதிய அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில் அதன் ஆற்றல்களை கவனம் செலுத்துவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.
“பல நாட்களாக இந்த கொள்கை ஒப்புதலுக்கு காத்திருந்தோம், இன்றைய அறிவிப்பு ஒரு இன்ப செய்தியாக வந்துள்ளது. இந்த கொள்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்திய விண்வெளி துறையில் நீண்டகால சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்," என இந்திய விண்வெளி சங்கத்தின், இயக்குநர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் (ஓய்வு) கூறியுள்ளார். இந்திய விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தரும் பிரதமர் மோடி - 3 நாட்கள் புலிகள் காப்பகம் மூடல்