9 AM National Headlines: சுட்டெரிக்கும் வெயில்.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி.. இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
-
இன்று முதல் வெப்ப அலை வீசும்.. இந்த மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கும்.. இந்திய வானிலை மையம் அலர்ட்..!
மே மாதத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை அதிகளவில் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்தியாவின் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், கிழக்கு உத்தர பிரதேசம், ஆந்திரா, வடக்கு சத்தீஸ்கர், கிழக்கு மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதியில் இயல்பை வட வெப்ப அலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, முதியவர்கள் மற்றும் சிறார்களை வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
பஞ்சாப் தொழிற்சாலையில் வாயுக்கசிவு; மூச்சுத்திணறி 9 பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 11 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்டின் குளிரூட்டும் அமைப்பிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
-
இனிமே கூடுதல் கட்டணம்.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி...!
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில்ஸ்விக்கி நிறுவனத்தில் நஷ்ட அளவு கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் படிக்க
-
மனதின் குரல் 100வது எபிசோட்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி பேச்சு
கடந்த 2014ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதன் 100வது எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் மகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதற்காக 'செல்ஃபி வித் டாட்டர்' பிரச்சாரம் உலகமயமாகிறது என தெரிவித்தார். மேலும் படிக்க
-
அதிரடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.. வசமாக சிக்குகிறார் பைஜு ரவீந்திரன்?
பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பைஜு ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். விதிகளை மீறி, வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது. புகார்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள பைஜூஸ் நிறுவனம், "நாங்கள் அதிகாரிகளுடன் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் படிக்க