மேலும் அறிய

Mann Ki Baat 100 Highlights: மனதின் குரல் 100வது எபிசோட்; பிரதமர் மோடி பேச்சின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

"மன் கி பாத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், பேசப்பட்ட சக குடிமக்களின் திறன்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன"

கடந்த 2014ஆம் ஆண்டு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

"பாசிட்டிவிட்டியை மன் கி பாத்"

பல முக்கிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் உத்வேகம் அளிக்கும் நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த சூழலில், மன் கி பாத் நகிழ்ச்சியின் 100ஆவது பாகம் இன்று ஒலிபரப்பானது.

"கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி, விஜயதசமி நன்னாளில், மன் கி பாத் நிகழ்ச்சியை தொடங்கினோம். #MannKiBaat இன் 100வது எபிசோடை முன்னிட்டு அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாசிட்டிவிட்டியையும் மக்கள் பங்கேற்பையும் கொண்டாடினோம்.

"மகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதே நோக்கம்"

'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' விழிப்புணர்வு ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்தியுள்ளது. 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' என்ற விழிப்புணர்வு ஹரியானாவில் இருந்தே தொடங்கினேன். 'செல்ஃபி வித் டாட்டர்' பிரச்சாரம் என்னை மிகவும் பாதித்தது. அதை நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் குறிப்பிட்டேன். விரைவில் இந்த 'செல்ஃபி வித் டாட்டர்' பிரச்சாரம் உலகமயமாகிறது. இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஒருவரின் வாழ்க்கையில் மகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதாகும்.

மணிப்பூரைச் சேர்ந்த விஜயசாந்தி தாமரை இழைகளில் இருந்து ஆடையை தயாரிக்கிறார். அவரின் தனித்துவமான யோசனை குறித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினேன். அவரது பணி இன்னும் பிரபலமானது.

சத்தீஸ்கரில் உள்ள தியோரா கிராமத்தின் பெண்கள் குறித்தும் தமிழ்நாட்டின் பழங்குடிப் பெண்கள் டெரகோட்டா கோப்பைகளை தயாரித்தது குறித்தும் வேலூர் ஏரியை பெண்கள் பொலிவூட்டியது பற்றியும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கதைகளை நிகழ்ச்சியில் பேசியுள்ளேன். இது, மகிழ்ச்சி அளிக்கிறது. 

"வெகுஜன இயக்கங்களை வேகம் பெறச் செய்தது"

#MannKiBaat ஆனது ஆத்மநிர்பர் பாரதத்தை ஊக்குவிப்பது முதல் மேக் இன் இந்தியா மற்றும் விண்வெளி ஸ்டார்ட்அப்கள் வரை பல்வேறு துறைகளில் திறமையான நபர்களின் கதைகளை காட்சிப்படுத்தியுள்ளது. பொம்மைத் தொழிலை மீண்டும் நிறுவுவதற்கான நோக்கம் மன் கி பாத் மூலம் தொடங்கியது.

'ஹர் கர் திரங்கா' அல்லது 'கேட்ச் தி ரெயின்' என பல வெகுஜன இயக்கங்களைத் தூண்டுவதில் மன் கி பாத் உத்வேகமாக இருந்துள்ளது. மன் கி பாத் வெகுஜன இயக்கங்களை வேகம் பெறச் செய்துள்ளது. மன் கி பாத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், பேசப்பட்ட சக குடிமக்களின் திறன்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன. 

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு குடிமகனும் இன்னொருவருக்கு உத்வேகமாக மாறியுள்ளனர். ஒருவகையில், மன் கி பாத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த நிகழ்ச்சிக்கான களத்தைத் தயார்படுத்துகிறது" என்றார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget