காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
இன்று முதல் இந்தியாவில் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகளை சுருக்கமாக, தெளிவாக வழங்கும் தலைப்புச் செய்திகள்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. இன்று முதல் இந்தியாவில் 18 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் கடந்த 28ஆம் முதல் கோவின் தளத்தில் தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது.
2. உலகம் முழுவதும் மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
3. தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. வாக்கு எணிக்கை பணிக்காக தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
4. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 21 ஆயிரத்து 575-ஆக அதிகரித்துள்ளது.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் சீனா துணை நிற்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
6. கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
7. இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார். அவருக்கு வயது 91 . கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
8. இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
9. சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த 16 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.45 ரூபாய்க்கும் டீசல் 85.5
10. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை மாதத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 216 ரூபாய் குறைந்துள்ளது.