மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today Tamil: அதிகரிக்கும் ஒமிக்ரான்...நெரிசலில் சிக்கி 12 பேர் பலி... கடற்கரைக்கு தடை.. இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடக்கம்
- அடுத்த மூன்று நாட்களுக்கு குமரி, மன்னார் வளைகுடாவிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
- புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
- வர்த்தக சிலிண்டர் விலை ரூ.102 குறைப்பு : சென்னையில் ரூ.23,134 ஆக நிர்ணயம்
- சென்னை கடற்கரையில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை : மாநகராட்சி அறிவிப்பு
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு
- தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : கடந்த 24 மணிநேரத்தில் 1,489 பேருக்கு தொற்று பாதிப்பு
இந்தியா:
- ஜம்மு – காஷ்மீர் வைஷ்ணோ தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
- பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி விடுவிப்பு
- ஹரியானாவில் பயங்கர நிலச்சரிவு – மீட்பு பணிகள் தீவிரம்
- கேரளாவில் புத்தாண்டு விற்பனைக்காக பதுக்கப்பட்ட 96 கிலோ கஞ்சா பறிமுதல் – தலைமறைவான திரைப்பட நடிகரை தேடும் பணி தீவிரம்
உலகம்:
- இஸ்ரேலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு
- ஆப்கனுக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை அனுப்பியது இந்தியா
- ஒமிக்ரான், கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர நடவடிக்கை
- 2021ம் ஆண்டு உலகம் முழுவதும் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை – பெல்ஜியம் பத்திரிகையாளர்கள் அமைப்பு அறிக்கை
விளையாட்டு:
- 9 சீசனில் 8 முறை சாம்பியன்ஸ் ; U19 ஆசிய கோப்பையில் ரெக்கார்டு படைத்த இந்திய அணி
- ”கோலியை பரிசீலிக்க சொன்னோம்” - மெளனம் கலைத்த இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா
- வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவிப்பு
2022ம் ஆண்டிற்கான முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார் நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion