மேலும் அறிய
Advertisement
தி.மு.க போராட்ட அறிவிப்பு, நிபா வைரஸ், வெற்றியை நோக்கி இந்தியா - பரபரப்பான தலைப்புச் செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
- வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் – அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
- தி.மு.க. கூட்டணி கட்சிகள் 20-ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
- கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழப்பு – தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
- தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1592 பேருக்கு கொரோனா பாதிப்பு
- தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
- தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து 8-ந் தேதிக்கு பின் முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
- வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- கோடநாடு கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள 8 நபர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த திட்டம்
- சென்னையில் 300 சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து 15 கொள்ளையர்களை கைது செய்தது காவல்துறை
- முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
- மதுரையில் மாந்தீரிகம் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முயற்சி – பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 63 லட்சம் பறிமுதல்
- வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ந் தேதி நாடு முழுவதும் பாரத் பந்த் – விவசாயிகள் அறிவிப்பு
- ஜப்பானில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு – 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை
- ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதில் தலிபான்கள் அமைப்புகளுக்கு இடையே மோதல்
- ஆப்கானிஸ்தானில் மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான சேவை
- லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 50 ரன்களையும், முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்திருந்த ஷர்துல் தாக்கூர் 60 ரன்களையும் அடித்ததால் இந்திய அணி 466 ரன்களை இந்தியா குவித்தது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion