காலை முக்கியச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பா? தவறு செய்த கோலி... தியேட்டர் ஓப்பன்... இன்னும் பல!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
* அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
* வீட்டுக்கே நேரடியாக வந்து சிகிச்சை அளிக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரேநாளில் 196 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரேநாளில் கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் 1,943 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
* புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. இரவு 9 மணி வரை திறந்து வைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
* செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தீவிரமான விஷயம்தான் என்று உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
* நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவது தேச விரோத செயல் என்று பிரதமர் நாரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
* பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
* விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சனைகள், பெகாசஸ் குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
* சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூபாய் 30.30 லட்சத்தை அடுத்த 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று நடிகர் தனுஷிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் இன்று முதல் 'அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்குகிறது.
* இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலே ஜோஸ் பட்லரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.
* இந்தியா ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
* டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
* சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் விலை ரூபாய் 102.49க்கும், டீசல் ரூபாய் 94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற