மேலும் அறிய
Advertisement
Today Headlines : சூடுபிடிக்கும் அரசியல் கட்சிகள் இடப்பங்கீடு..! ரஷ்யாவிற்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை...! காலிறுதியில் இந்தியா..! முக்கியச்செய்திகள் பல
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 99 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் நாட்களில் இருந்து வேட்புமனுத் தாக்கல் அதிகரிக்க வாய்ப்பு
- ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் – மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
- ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரதிநிதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவகாரம் – தி.மு.க.வுடன் வி.சி.க. பேச்சுவார்த்தை
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே 4 மணி நேரம் பேச்சுவார்த்தை
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை
- நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம்
இந்தியா :
- குடியரசு தின நிறைவு விழா நிகழ்ச்சி : பாசறை திரும்பிய முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி
- பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நேச ஒளி
- மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 3 டன்கள் மருந்துகளை அனுப்பிய இந்தியா
- பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா விலைக்கு வாங்கியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி
உலகம் :
- உக்ரைன் விவகாரம் : ரஷ்யாவிற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமை அதிகாரி எச்சரிக்கை
- அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் தொடரும் கடும் பனிப்பொழிவு : சாலைகளில் படர்ந்துள்ள பனிகளால் மக்கள் கடும் அவதி
விளையாட்டு :
- 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் : காலிறுதியில் இந்தியா வெற்றி
- 19 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி
- ஆஸ்திரேலிய ஓபன் : ரபேல் நடால், டேனியல் மெத்வதேவ் இன்று இறுதிப்போட்டியில் மோதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion