மேலும் அறிய
Advertisement
Today Headlines: மிக கனமழை அபாயம்.. பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட்..சில முக்கியச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- கனமழை அபாயம் காரணமாக தமிழ்நாட்டில் நாகை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பொழிவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊருக்குள் ஆறுபோல ஓடும் வெள்ளம் – முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
- சென்னையில் வீடுகளைச் சூழ்ந்திருக்கும் பல பகுதிகளிலும் நீர் வடியாததாலும், பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த அவதி
- காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கனமழையால் குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளநீர் ஓடி வருகிறது.
- புகழ்பெற்ற குற்றால அருவியில் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை
- ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
- பிரபல திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
இந்தியா :
- ஒமிக்ரான் வைரஸ் பரவல் அபாயம் : வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம்
- ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்காக விமான பயணிகளுக்கான கெடுபிடிகள் மேலும் அதிகரிப்பு
- தென்னாப்பிரிக்கா. இஸ்ரேல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
- தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்ட்ரா வந்தவருக்கு கொரோனா – ஒமிக்ரான் வைரசா? என ஆய்வு
உலகம் :
- உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிற்கும் பரவியது
- கனடா வந்த வௌிநாட்டு பயணிகள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
- இந்திய எல்லையில் மீண்டும் சீனா அத்துமீறல்
விளையாட்டு :
- விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது கான்பூர் டெஸ்ட் : நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு
- இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய உடனே விக்கெட்டை பறிகொடுத்த நியூசிலாந்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion