மேலும் அறிய
Advertisement
Today Headlines: தென்பெண்ணை, பாலாற்றில் வெள்ளம்...! மிதக்கும் வேலூர், ராணிப்பேட்டை...! - தலைப்புச்செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பாலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு
- வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வெள்ளக்காடானது
- கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு
- தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கிய கடலூர்
- பாலாறு, தென்பெண்ணை ஆற்று வெள்ளங்களினால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம்
- பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம் – ராணிப்பேட்டை – சித்தூர் இடையே போக்குவரத்து துண்டிப்பு
- சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- நவம்பர் 24-ந் தேதி சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்தியா:
- புதுச்சேரியில் நேற்று மாலை முதல் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது
- புதுச்சேரியில் பெய்த கனமழையால் 5 கிராமங்களில் 5 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
- தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு இன்று சென்னை வருகை
- வெள்ள பாதிப்பு பகுதிகளை நாளையும், நாளை மறுநாளும் மத்திய குழு நேரில் ஆய்வு
- ராஜஸ்தானில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா – ராஜஸ்தான் அரசியல் பரபரப்பு
- பெண்களை பிரச்னைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும் – சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
- வேளாண் சட்டங்களைப் போல சி.ஏ.ஏ. சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் – மீண்டும் வலுப்பெறும் கோரிக்கைகள்
உலகம்:
- பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனைப் பற்றி ரகசியங்களை வெளியிட்ட கார் டிரைவர் – சர்ச்சையில் சிக்கிய மைக் டைசன்
விளையாட்டு:
- சென்னை சூப்பர்கிங்சிற்காக தோனி இன்னும் பல போட்டிகளில் ஆட வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- என்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்கும் – மகேந்திர சிங் தோனி உருக்கம்
- கொல்கத்தாவில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது
- நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion