மேலும் அறிய
Advertisement
Today Headlines: ராணுவ தளபதி இன்று குன்னூர் வருகை... காசியில் விழா.. பார்முலாவில் ஹாமில்டன் தோல்வி.. இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
- அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் – இன்றும், நாளையும் நடத்த ஏற்பாடு
- ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்ய ராணுவத் தளபதி நரவனே இன்று குன்னூர் வருகை
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உதவி செய்த தமிழக அரசுக்கு தென்மண்டல ராணுவத் தளபதி நன்றி
- அனைத்து தேர்வுகளும் நேரடித் தேர்வுகளாக நடைபெறும் என்று யூ.ஜி.சி. பெயரில் வெளியான போலி கடிதம்
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று 33ம் கட்ட விசாரணை தொடக்கம்
இந்தியா :
- வாரணாசியில் ரூபாய் 339 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
- புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் 5 லட்சம் சதுர அடியில் விரிவாக்கம்
- வாரணாசி கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் லட்சக்கணக்கான போலீசார் – காசியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
- கடன் தள்ளுபடி உள்ளிட்ட புதிய கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் புதிய போராட்டம் நடத்த ஆலோசனை
- ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக மும்பையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்
- இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 38 ஆக உயர்வு
உலகம் :
- 2 மணி நேரத்தில் ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் மரணம் தொடர்பாக அவதூறு பரப்பிய பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு
- கொரோனா தடுப்பூசி ஒமிக்ரான் பாதிப்பை தடுக்கும் – உலக சுகாதார நிறுவனம்
- தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்வதாக சவுதி அரேபிய அரசு தடை
- லெபனான் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
- ஆஸ்திரியாவின் வியன்னாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு
விளையாட்டு :
- அபுதாபியில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் ஹாமில்டன் தோல்வி
- அபுதாபி பார்முலா 1 கார் பந்தயத்தில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன்
- நமது வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் – இந்திய வீரர்களுக்கு புதிய கேப்டன் ரோகித் சர்மா அறிவுரை
- தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இடம்பிடிக்க ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யருக்கு பிரகாச வாய்ப்பு
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் டெஸ்டில் இங்கிலாந்து தோற்றது ஆச்சரியம் அளிக்கவில்லை – முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion