இன்றைய முக்கியச் செய்திகள்: வெள்ளை அறிக்கை வெளியீடு..கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மோசமான தோல்வி...சென்னையில் கனமழை...இன்னும் பல..!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
* தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநில நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
*நிதி நிலையை பார்க்கும்போது தன்னால் இதை செய்ய முடியுமா என அவ்வப்போது அச்சம் வருகிறது என்று, வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்பு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
*சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கிண்டி, தியாகராய நகர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
*அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது.
*பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை - முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
*வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின் கட்டணம், பஸ் கட்டணம், சொத்து வரியை உயர்த்தக் கூடாது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
*தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1929 (நேற்று முன்தினம்- 1,956) பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,77,237 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235 பேரும், சென்னையில் 182 பேரும்,ஈரோடில் 178 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
*பெகசஸ் உளவு பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஒ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மாநிலங்களவையில் பதில் அளித்துள்ளது.
*சுதந்திர தினத்தன்று பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன தேசியக்கொடிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*அதிமுக அரசு 3 மடங்கு அதிக விலை கொடுத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் கூறியுள்ளார்.
*பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.
*மேகதாது அணை கட்டத் தேவையான அனுமதி பெறுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் கூறியுள்ளார்.
*தமிழ்நாட்டில் மின் கட்டணம்... பஸ் டிக்கெட் கட்டணம்... உயர்கிறதா? வெள்ளை அறிக்கை வெளியிட்ட பிடிஆர் சூசகம்!
* 4 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
* வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்களில் ஆல் அவுட்டானது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற