மேலும் அறிய
Advertisement
காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தலைப்புச் செய்திகள்
- தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
- மளிகை, காய்கறி கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், காலை 6 மணிக்கே கடைகள் திறப்பு.
- ஒரு வாரத்திற்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
- சென்னை உள்பட 27 மாவட்டங்களில் எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்ட தொழில் செய்பவர்களுக்கு இன்று முதல் அனுமதி.
- இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள் ஒருவாரத்திற்கு பிறகு இன்று முதல் இயங்கும்.
- அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட உள்ளது.
- தமிழகத்தில் 21 ஆயிரத்திற்கும் கீழ் நேற்று கொரோனா பாதிப்பு குறைந்தது.
- 12 வயதிற்கு கீழ் உட்பட்ட 778 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்குழுத் தலைவராக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் நியமனம்.
- சென்னையில் காவல்துறையினரை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு.
- 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் வியாபாரிகளுக்கு மட்டுமே சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதி – சென்னை மாநகர ஆணையர்.
- தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 921 நபர்கள் பாதிப்பு.
- இந்திய எல்லையில் ஏற்கனவே பணியில் இருந்த 90 சதவீத வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை பணியில் ஈடுபடுத்திய சீனா.
- பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி.
- சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.96.71க்கும் மற்றும் ஒரு டீசல் விலை 26 காசு உயர்ந்து ரூ.90.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நாட்டில் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆனது.
- சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்த நிலையில், வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் பெடரர் திடீர் விலகல். மூன்றாவது சுற்றில் வென்ற போதிலும் காயம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
- சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இணை நோயுடன் இருக்கும் வசதி இல்லாதவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
- இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் இரண்டரை லட்சம் பேர் பாதிப்பு.
இது போன்ற இன்னும் பல செய்திகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ள www.abpnadu.com என்ற இணையதளத்தை பின்தொடருங்கள். அப்ளிகேஷன் மூலமும் எங்களின் செய்திகளை அறியலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion