மேலும் அறிய
Advertisement
News Wrap :புத்தாண்டு கொண்டாட்டம்.! காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு..! இஸ்ரேலில் புதிய வைரஸ்..! - முக்கியச் செய்திகள்
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
- ஒமிக்ரான் கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள்
- ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடக்கம்
- கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது
- புத்தாண்டு கட்டுப்பாடுகள் விதிமுறை மீறல் சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
- புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- அடுத்த மூன்று நாட்களுக்கு குமரி, மன்னார் வளைகுடாவிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
இந்தியா:
- சேலம் பெண் விவசாயியுடன் காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார் பிரதமர் மோடி
- இந்தியா முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவானது கொரோனா பாதிப்பு
- ஜம்மு – காஷ்மீர் வைஷ்ணவா தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
- ஹரியானாவில் பயங்கர நிலச்சரிவு – மீட்பு பணிகள் தீவிரம்
- பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி விடுவிப்பு
- கேரளாவில் புத்தாண்டு விற்பனைக்காக பதுக்கப்பட்ட 96 கிலோ கஞ்சா பறிமுதல் – தலைமறைவான திரைப்பட நடிகரை தேடும் பணி தீவிரம்
- வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 102 குறைப்பு
உலகம் :
- ஆப்கானுக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை அனுப்பியது இந்தியா
- 2021ம் ஆண்டு உலகம் முழுவதும் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை – பெல்ஜியம் பத்திரகையாளர்கள் அமைப்பு அறிக்கை
- 2022ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஒழிந்துவிடும் : உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை
- உணவுப் பற்றாக்குறை, பொருளாதாரம் மீது கவனம் செலுத்தப்படும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உரை
- ஒமிக்ரான், கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர நடவடிக்கை
- இஸ்ரேலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு
விளையாட்டு :
- 2022ம் ஆண்டிற்கான முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார் நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே
- வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவிப்பு
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடக்கம்
- தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion