ஏகப்பட்ட வேலை இருக்கு - இன்றே ஆட்சியமைக்க உரிமை கோரும் மமதா

மாபெரும் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து இன்றே ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மமதா பானர்ஜி. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் துரிதமாக அரசு செயல்பட வேண்டி இருப்பதால் உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவதாக திரிணாமுல் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் கட்சியின் தலைவரான மமதா தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இது குறித்து தெரிவித்திருந்த மமதா, மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு தொகுதியை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. நான் தோல்வியடைந்தாலும், மாநிலத்தில் நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம். ஆனாலும் நந்திகிராமில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிகிறது. அதனால் நான் நீதிமன்றம் நாடுவேன் என தெரிவித்தார். ஏகப்பட்ட வேலை இருக்கு - இன்றே ஆட்சியமைக்க உரிமை கோரும் மமதா

இந்நிலையில் இன்றே ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மமதா பானர்ஜி. இன்று மாலை திரிணாமுல் அலுவலகத்தில் அனைத்து எம் எல் ஏக்களுடன் மமதா ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம் எல் ஏக்கள் ஒருமனதாக மமதாவை முதல்வராக தேர்வு செய்வார்கள் என தெரிகிறது. ஏற்கெனவே மமதாவின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பெரிய அளவில் அமைச்சரவை, அதிகாரிகள் மாற்றம் இருக்காது என்பதால் மிக விரைவாக மமதாவின் புதிய ஆட்சி தொடங்கப்படும் என தெரிகிறது. ஏகப்பட்ட வேலை இருக்கு - இன்றே ஆட்சியமைக்க உரிமை கோரும் மமதாஇதற்கிடையே மமதா தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் முதல்வர் பதவியை தொடர வேண்டுமானால் 6 மாதக் காலத்திற்கும் அவர் மீண்டும் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைய வேண்டும். எனவே அவர் தனக்கு சாதகமான தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. குறிப்பாக மமதாவின் சொந்த தொகுதியான பவானிபூரில் களம் இறங்கி எளிதாக அவர் வெற்றியடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் துரிதமாக அரசு செயல்பட வேண்டி இருப்பதால் உடனடியாக ஆட்சியமைக்க உரிமை கோருவதாக திரிணாமுல் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tags: TMC West Bengal mamata Nandigram

தொடர்புடைய செய்திகள்

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

PM Modi G7 Speech: G7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!

பல்ஸ் ஆக்சிமீட்டர், சானிடைசர், வெப்பநிலை பரிசோதனைக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பு!

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Bio Weapon என்று கருத்துகூறிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு : நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்..!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

Coronavirus India Updates: தொடர்ந்து குறையும் கொரோனா... ஆனாலும் அலர்ட்டா இருங்க!

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

சரத் பவார்- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: என்ன நடக்கிறது மகாராஷ்டிரா அரசியலில்?

டாப் நியூஸ்

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!