![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thiruvanthapuram Mayor | இளம் எம்.எல்.ஏவை கரம் பிடிக்கபோகும் திருவனந்தபுரத்தின் இளம் மேயர் ! விரைவில் டும் டும் டும்...!
திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் இளம் எம்.எல்.ஏவை திருமணம் செய்ய உள்ளார்.
![Thiruvanthapuram Mayor | இளம் எம்.எல்.ஏவை கரம் பிடிக்கபோகும் திருவனந்தபுரத்தின் இளம் மேயர் ! விரைவில் டும் டும் டும்...! Thiruvanthapuram Mayor Arya Rajendran set to marry Youngest Kerala MLA Sachin Dev Thiruvanthapuram Mayor | இளம் எம்.எல்.ஏவை கரம் பிடிக்கபோகும் திருவனந்தபுரத்தின் இளம் மேயர் ! விரைவில் டும் டும் டும்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/16/d2ad5659b3ce24454c55e9251593c561_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மாநகராட்சி மேயராக இருந்து வருபவர் ஆர்யா ராஜேந்திரன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் வெற்றி பெற்று திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதில் பதவியேற்றார். இதன்மூலம் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வயதில் மேயராக பதவியேற்றவர் என்ற பெருமையை இவர் பெற்று இருந்தார்.
இந்நிலையில் இவருக்கும் கேரளாவின் பாலுசேரி தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சச்சின் தேவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆர்யா ராஜேந்திர மற்றும் சச்சின் தேவ் ஆகிய இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசங்கம் பிரிவில் இருந்து ஒன்றாக இருந்து வந்துள்ளனர். அதன்பின்னர் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயில் இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். அங்கு இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ சச்சின் தேவ், "ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சச்சின் தேவ் சிறு வயது முதல் ஒரு கொள்கையை கொண்டவர்கள். எனவே ஒரே கொள்கை பிடிப்பு உடைய இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். இந்த இருவருக்கும் திருமணம் எப்போது என்று தெரியவில்லை. எனினும் கூடிய விரையில் இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்து தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய கேரள சட்டப்பேரவையில் மிகவும் இளம் வயது எம்.எல்.ஏ சச்சின் தேவ் தான்.சச்சின் தேவ் கோழிக்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளார். அதன்பின்னர் கோழிக்கோடு சட்டக்கல்லூரியில் இவர் சட்டம் பயின்றுள்ளார். ஆர்யா ராஜேந்திரன் புனித செயிண்ட் கல்லூரியில் பிஎஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார். கேரளாவின் முடுவாங்கால் வார்ட்டில் ஆர்யா ராஜேந்திரன் யுடிஎஃப் வேட்பாளர் ஶ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதன்பின்னர் திருவனந்தபுரத்தின் மேயராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர், சமூக ஆர்வலர் - யார் இந்த தீப் சிங் சித்து..?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)