மேலும் அறிய

Deep Sidhu Death: விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர், சமூக ஆர்வலர் - யார் இந்த தீப் சிங் சித்து..?

பாலாஜி டெலிஃபிலிம்ஸின் சட்டப்பூர்வ தலைவராக பணிபுரியும் போது, ஏக்தா கபூர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பஞ்சாபி திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சிங் சித்து சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். 37 வயதில் அவர் மரணமடைந்திருப்பது விவசாயிகளுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி  அருகே குண்ட்லி-மனேசர் நெடுஞ்சாலையில் இன்று நடந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததாக சோனிபட் காவல்துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தீப் சித்து..?

தீப் சிங் சித்து ஒரு பஞ்சாபி நடிகர் மற்றும் பஞ்சாபி ஃபிலிம் இண்டஸ்ட்ரி மற்றும் ஹிந்தி ஃபிலிம் இண்டஸ்ட்ரியுடன் தொடர்புடைய மாடல் ஆவார். அவர் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்த இடம் பஞ்சாப்பில் உள்ள முக்த்சர் ஆகும்.  தனது சொந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின்பு, பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.

பின்னர், 'கிங்பிஷர் மாடல் ஹன்ட்' போன்ற மாடலிங் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று 'கிராசிம் மிஸ்டர் பெர்சனாலிட்டி' என்ற பட்டத்தைப் பெற்றார்.  ஹேமந்த் திரிவேதி, ரோஹித் காந்தி போன்ற வடிவமைப்பாளர்களுக்காக மும்பையில் ராம்ப் வாக் செய்துள்ளார். மாடலிங் துறையில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் அவர் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி செய்யத் தொடங்கினார். சஹாரா இந்தியா பரிவாரில் சட்ட ஆலோசகராகவும், பின்னர் ஹேமண்ட்ஸ் மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் என்ற பிரிட்டிஷ் சட்ட நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்.

பாலாஜி டெலிஃபிலிம்ஸின் சட்டப்பூர்வ தலைவராக பணிபுரியும் போது, ஏக்தா கபூர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

தர்மேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரித்த பஞ்சாபி திரைப்படமான ‘ராம்தா ஜோகி’ மூலம் தீப் தனது நடிப்பை தொடங்கினார். 2017 ஆம் ஆண்டில் வெளியான அவரின் 'ஜோரா 10 நம்பரியா' பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் ரங் பஞ்சாப், சாதே ஆலே மற்றும் ஜோரா - தி செகண்ட் ஆகிய படங்களில் நடித்தார்.


Deep Sidhu Death: விவசாயிகளுக்காக குரல் கொடுத்த நடிகர், சமூக ஆர்வலர் - யார் இந்த தீப் சிங் சித்து..?

அரசியல் பயணம்:

சித்து 2019 இல் அரசியலில் இறங்கினார். குர்தாஸ்பூர் பாஜக எம்பி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சன்னி தியோலுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலரான சித்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, கடந்த 2021ஆம் ஆண்டு விவசாயிகள் குடியரசு தின அணிவகுப்பின் போது செங்கோட்டையில் கலவரத்தைத் தூண்டி மதக் கொடியை ஏற்றியதற்காக சித்துவை போலீசார் கைது செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்தாலும், இதுதொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர்,  அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது கார் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget