Watch Video: மாரியாத்தா.. காளியாத்தா.. மாட்டாம இருக்கணும்.. அம்மனை கும்பிட்டு திருடிய அலப்பறை
அம்மன் சிலையின் முன் மனமுருகி கைக்கூப்பி பிரார்த்தனை செய்வதும், பூஜை முடிந்து கருவறையில் நன்கொடைப் பெட்டிகளைத் திருடுவதும் பதிவாகியுள்ளது
சமூக வலைதளங்களில் நாம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விநோதமான வீடியோக்களை பார்த்தவாறு நம் பொழுதைக் கழித்து வருகிறோம்.
சில வீடியோக்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. சில நம்மை மகிழ்விக்கின்றன. சில நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் நம்மை திகைப்பிலும் வியப்பிலும் ஒரு சேர ஆழ்த்தும் வீடியோ ஒன்று முன்னதாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
திருட்டுக்கு முன் மனமுருகி அம்மன் தரிசனம்
மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மன் சிலையின் முன் கைக்கூப்பி வணங்கிவிட்டு நன்கொடைப் பெட்டிகளை திருடும் நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கலவையான உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சட்டை அணியாத நபர் ஒருவர் கோயிலின் கருவறைக்குள் திரையைத் தூக்கிக் கொண்டு நுழைவதும், தொடர்ந்து அவர் அம்மன் சிலையின் முன் மனமுருகி கைக்கூப்பி பிரார்த்தனை செய்வதும், பூஜை முடிந்து கருவறையில் நன்கொடைப் பெட்டிகளைத் திருடுவதும், தொடர்ந்து மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்வதும் திரைப்பட, சீரியல் காட்சிகள் போல் இச்சம்பவம் முழுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
Viral Video: A shirtless thief before stealing 2 donation boxes and bells, Bows down to Maa Laxmi in a temple in Jabalpur, MP. pic.twitter.com/0MxjfebTBK
— TheVipin (@TheVipin_) August 9, 2022
காவல் துறையினர் விசாரணை
இந்நிலையில், தன் முகத்தை மூடியபடி திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற விநோதமான திருட்டு வீடியோக்கள் தொடர்ந்து நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.
Be Alert and stay Safe from these types of Incident.
— Dalbir Singh (@DalbirSingh8765) June 9, 2022
Watch how in a blink of an eye a man looses his mobile phone due to lack of his Senses. this Live video was shot from a train at Begusarai in Bihar.pic.twitter.com/WfWX93t8GA
முன்னதாக இதே போல் பாலத்தின் மீது ஓடும் ரயிலில் பயணிக்கும் நபரிடமிருந்து பாலத்தில் நின்றபடி செல்போன் பறிக்கப்படும் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்